பரந்தூர் விமான பிரச்சனை காரணமாக மக்களுக்கு ஆதரவு அளிக்க விஜய் செல்ல இருக்கும் நிலையில் தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி மிகப்பெரிய அளவில் முதல் மாநாட்டை நடத்தி அசத்தினார். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய், தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். மேலும் விஜய் வெளியே வந்து எதையும் பேசாமல் இருந்து வருகிறார் என்று ஒரு கூட்டம் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர்.
தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அறிக்கை வெளியீட்டு இருந்ததில் இருந்து அங்கு வாழும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பரந்தூர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் இன்று பரந்தூர் செல்கிறார். இதற்காக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!
அதன்படி, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை முதல் அப்பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இந்நிலையில் தவெக கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் என்பவரை காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது. அதாவது, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று போலீஸ் தெரிவித்த நிலையில், அதில் அவருடைய கார் நம்பர் இல்லை என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!
மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?
டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?