தவெக தலைவர் விஜய் தளபதி 70 படத்தில் நடிக்கும் விதமாக சினிமா நெருங்கிய வட்டாரங்கள் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இளைய தளபதியில் இருந்து தற்போது தளபதியாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் கடைசியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் முழுவதுமாக அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். மக்களுக்காக சினிமாவை விட்டு வெளியேறி அரசியல் காண இருக்கிறார்.
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!
இதனால் தளபதி 69 தான் அவருடைய கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் விஜய் ‘தளபதி 69’ படத்தை முடித்த பிறகு 2026 தேர்தல் வருவதற்கு பல நாட்கள் இருப்பதால், அந்த இடைவெளியில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி தளபதி 70 திரைப்படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 படங்கள்.., பிள்ளையார் சுழி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் விடாமுயற்சி!!
அதுமட்டுமின்றி அந்த படம் ‘GOAT 2’ அல்லது ‘லியோ 2’-வாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, விஜய் வெங்கட் பிரபுவிடம் GOAT 2 கதையை டெவெலப் செய்ய சொன்னதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தளபதி 70 படத்தை வெங்கட் பிரபு இயக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!