Home » செய்திகள் » பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

விமான நிலையம் கொண்டு வரும் தொடர்பாக பரந்தூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு வைரலாக பரவி வருகிறது.

நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்படி அவர் பேசியதாவது, ”  இங்கு நடக்கும் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் ஒருவன் பேசியதை நான் கேட்டேன். அவன் பேசியது மனதை ஏதோ செய்தது, அதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்தேன். கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறீர்கள். எனது முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு.

என்னுடைய அரசியல் பயணத்தை உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு  தொடங்குகிறேன். இது ஓட்டு அரசியலுக்காக இல்லை. எனவே விவசாயத்திற்கு எதிரான திட்டத்தில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன் என்று பேசினார். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை ஏன் கைவிட முடியவில்லை, இதனால் நம்மை ஆளும் அரசுக்கு லாபம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் ஏர்போர்ட் வர கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. பரந்தூரில் கொண்டு வர கூடாது என்று தான் சொல்கிறேன். இந்த விஷயத்தில் நான் உங்களுடன் நிற்பேன் என்று உறுதியாக தெரிவித்தார். விரைவில் உங்களை உங்க ஊரில் வந்து சந்திப்பேன் என்றும் கவலை படாதீங்க வெற்றி நிச்சயம் என்று கூறினார். இதனை தொடர்ந்து அவருக்கு விவசாயிகள் சார்பாக பச்சை பொன்னாடை போடப்பட்டது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!

தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top