Home » செய்திகள் » ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி MLA வாக இருந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவரின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குப்பதிவு வருகிற பிப்.5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளராக சீதாலட்சுமி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால், அ.தி.மு.க, பாஜக, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

மேலும் இந்த இடைத்தேர்தலில் இருந்து வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு இன்று (ஜன.20) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதன்படி, இதுவரை 8 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து வெளியேறினார்கள். எனவே இந்த தேர்தல் களத்தில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக போட்டி ஈடுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!

கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!

தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top