Home » பொது » 2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

இந்த ஆண்டு 2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள் பட்டியல் குறித்து சோசியல் மீடியாவில் எங்கள் SKSPREAD நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனம்(BIKE) மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். லட்ச கணக்கில் பணத்தை செலவழித்து புதிய வாகனங்களை வாங்கி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பயனர்களை கவரும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் புது புது அம்சங்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2025ல் அறிமுகமாக போகும் வாகனங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

Royal Enfield Classic 650:

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் விலை ₹3.40-3.60 லட்சம் ஷோ ரூமில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிளாசிக் 650 ஆனது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, சூப்பர் மீடியர் 650, கான்டினென்டல் ஜிடி 650, பியர் 650 மற்றும் ஷாட்கன் 650 போன்ற அதே 650சிசி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

KTM 390 Adventure:

KTM 390 அட்வென்ச்சர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ₹3.30-3.70 லட்சம் ரூபாய்க்கு ஷோ ரூமில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 390 ADV ஆனது 390 ட்யூக்கில் நாம் பார்த்த 399cc இன்ஜின் மூலம் தான் இயக்கப்படும். மேலும் முந்தைய வடிவமைப்புடன் ஒப்பிடும்போது இந்த புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

hero xpulse 421:

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 வருகிற ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை ₹2.50-2.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய்க்கு விற்க எதிர்பார்க்கப்படுகிறது. இதில்  421 சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரெல்லிஸ் பிரேம், லாங் டிராவல் சஸ்பென்ஷன், ஸ்போக் வீல் கள் மற்றும் டூயல் பர்ப்பஸ் ரப்பர் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Aprilia Tuono 457:

அப்ரிலியா டுவோனோ 457 அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 4 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில், RS 457 இல் காணப்பட்ட அதே 457 cc, இரட்டை சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பும் இது வரை இல்லாத மடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

BMW F 450 GS:

பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்த ஆண்டு இறுதி நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் இதன் விலை ₹4.50-5 லட்சம்  ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கின் எடை 178 கிலோவாக இருக்கும். இரட்டை சிலிண்டர் எஞ்சின் மற்றும் 48 bhp பொருத்தப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!

பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?

பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top