பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் தில் ராஜு. வேலம்குச்ச வேங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?
இதை தொடர்ந்து தற்போது சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. வசூலில் மிகவும் சொதப்பியது. இந்நிலையில் Producer Dil Raju வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. அதாவது, தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
குறிப்பாக ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அவரின் மகள் மற்றும் சகோதரர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. மொத்தம் 55 அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில், அவர் ‘தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின்’ தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!
தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!
கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!