கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சைஃப் அலிகான். 54 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16, 2025) அதிகாலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் ஒரு மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளாகி கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு அருகில் உட்பட பல கத்திக் காயங்களுக்கு ஆளானார். இதை தொடர்ந்து அவரை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
தொடர்ந்து அவரை ICUவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் கத்தியால் குத்திய நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகர் சைஃப் அலிகானின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சைஃப் அலிகானை குத்திய நபர் கைது.., 24 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்?
இந்நிலையில் சயீப் அலிகான் உடல்நிலை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். விரைவில் மீண்டும் அவர் படம் நடிக்க வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!