குடிபோதையில் அரைகுறை ஆடையுடன் ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் ஆபாச வார்த்தைகளைப் பேசி திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரெடியாக இருக்கிறது.
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
இது குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியானது. மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் தான். அந்த படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக் காட்டி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி, சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் போலீசிடம் ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இந்நிலையில் நடிகர் விநாயகன் மீண்டும் போதையில் தனது வீட்டின் பால்கனியில் அரைகுறை ஆடையுடன் நின்றபடி ரோட்டில் சென்றவர்களை தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தார். அதை எதிர் வீட்டில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, மீண்டும் விநாயகன் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!