விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோவான பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நிறைவு பெற்ற பிக்பாஸ் சீசன் 8 ஷோவின் டைட்டிலை முத்துக்குமரன் என்பவர் அடித்து சென்றார். அவருக்கு 40 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அன்ஷிதா. இந்த ஷோவில் 80 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அன்ஷிதாவுக்கு சக போட்டியாளரான விஷால் மீது கிரஷ் ஏற்பட்டது.
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
அதுமட்டுமின்றி, அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்த அன்ஷிதா அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். நல்ல நண்பர்கள் என்று கூறி வந்தார். இந்நிலையில், பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியே வந்ததும் அன்ஷிதாவுக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கி இருக்கிறது விஜய் டிவி. அதாவது, விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிரம்மாண்ட ஷோவான ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 (jodi are you ready season 2)வருகிற (ஜனவரி 26) ஞாயிறு முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
இந்த ஷோவில் தான் அன்ஷிதா போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அதற்கான ப்ரோமோ வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சீசனில், சாண்டி மாஸ்டர், மீனா மற்றும் ஸ்ரீதேவி நடுவர்களாக இருந்து வந்த நிலையில், இந்த 2வது சீசனில் மீனாவுக்கு பதில் நடிகை ரம்பா நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் வழக்கம் போல இந்த ஷோவை, ரியோ மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்க உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!