கடந்த வாரம் நடந்து முடிந்த பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா என்று அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதில், முத்துக்குமரன் வின்னராகவும் மற்றும் சௌந்தர்யா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரனுக்கு வெற்றி கோப்பையுடன் சேர்த்து ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. முத்துக்குமரனின் இந்த வெற்றியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அவருக்கு வெறும் பணத்தொகை மட்டும் கொடுத்து விஜய் டிவி ஏமாற்றி விட்டது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருந்தாலும் முத்து வாங்கிய பணத்தை தனது நண்பர்களுக்கும் பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவரின் சொந்த ஊர் காரைக்குடியில் இருக்கும் கல்லல் தானாம். அங்கு தான் அவர் பிறந்து வளர்ந்தாராம்.
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ்.., ஆகா என்னனு தெரியுமா?
பேச்சாளராக வளர்ந்த இவர் சினிமா நடிப்பின் மீது அதிகம் நாட்டம் கொண்டதால் சென்னைக்கு வந்தார். அதன்பிறகு, Youtube சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஷோவில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். இந்த நிலையில், பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் காரைக்குடி கல்லல் ஊரில் வாழ்ந்து வந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது. இது அவருடைய சொந்த வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!