Home » செய்திகள் » சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை பார்த்து ஓடுகின்றனர். இதற்காகவே மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு விரைந்து செல்ல தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஷேர் ஆட்டோ, அரசு பேருந்து போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல், ஒரு சமயத்தில் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக மினி பஸ் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சென்னை புறநகர் பகுதியில் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் முதல் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், அம்பத்தூர், ஆலந்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட இடங்களிலும் மினி பேருந்து இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக மினி பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் மக்களின் போக்குவரத்துக்காக தான் கூடுதல் சேவையை கருத்தில் கொண்டு தனியார் மினி பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மகளிர்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்கனவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.., பிப்ரவரி 11ம் தேதி வரை தான் டைம்?.., விண்ணப்பிப்பது எப்படி?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.., டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!!!

ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top