கேரளாவில் குழந்தைகளுக்கு பரவும் ‘வாக்கிங் நிமோனியா’ நோய் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக, சில வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது “வாக்கிங் நிமோனியா” என்ற நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த நோய் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் தான் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குழந்தைகளுக்கு பரவும் ‘வாக்கிங் நிமோனியா’ நோய்.., அறிகுறிகள் என்னென்ன?
இந்த நோய் வந்தால், மனிதனுக்கு லேசான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். அதுமட்டுமின்றி, தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக இருமல் இருந்தால் இந்த பாதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே அந்த அறிகுறிகள் தென்படும் நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும்.
இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!
மேலும் இந்த நோயால் பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் பாக்டீரியா சுவாசத் துளிகள் மூலம் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் இந்த நோய் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளை தான் அதிகமாக பரவி வருகிறது. இப்படி இருக்கையில், கேரளாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளும் இந்த நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.., டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!!!
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!