மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மதுரை மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!
இருந்தாலும் சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இந்த திட்டம் தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் மதுரையில் போராட்டம் வெடிக்க தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு கூட்டம் கூடியது போல், மதுரை டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடி போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர் குரல் எழுப்பி வந்தனர்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
இந்த சூழலில் இத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ஏழு பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து சந்தித்தார். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லிக்கு சென்ற அண்ணாமலையுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு தான் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!