சினிமாவில் நாளை ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து பெரிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சில படங்கள் வெற்றி வாகை சூடியது. ஆனால் ஒரு சில படங்கள் வழக்கம் போல் பிளாப் ஆகியது. அந்த வகையில் 12 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட விஷாலின் மதகஜராஜா படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி பல கோடி வசூலை வாரி குவித்தது.
ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இதனை தொடர்ந்து ஜனவரி மாதத்தின் கடைசி வாரமான, இந்த வாரத்தில் ரசிகர்களை கவர வருகிற ஜனவரி 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் திரையுலகில் இருந்து 6 படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதன்படி, குட் நைட் நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ’குடும்பஸ்தன்’ திரைப்படம், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான ‘பாட்டல் ராதா’ உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கிறது.
கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் லாஸ்லியா, பிக்பாஸ் ரயான் மற்றும் ஹரிபாஸ்கர் சேர்ந்து நடித்த ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’, அதே போல் செந்தில் மற்றும் யோகி பாபு சேர்ந்து நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’, கதிர் நடித்த ‘பூர்வீகம்’, சுந்தர் C நடித்துள்ள ‘வல்லான்’ உள்ளிட்ட படங்களும் நாளை வெளியாகின்றன. மேற்கண்ட அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகின்றன. பொறுத்து இருந்து பார்க்கலாம் நாளை யாருடை படம் வெற்றி பெறுகிறது என்று.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!