தளபதி விஜய் நிறுவிய தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி, அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அப்போது அவர் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!
கிட்டத்தட்ட 900 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜனவரி 20ம் தேதி பரந்தூர் மக்களை விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதற்கிடையில், தவெக கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து, பனையூரில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில் பதவிகளுக்கு பணம் கொடுத்தாலும், பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் எச்சரித்தார்.
மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்று பனையூரில் வைத்து மாவட்ட பொறுப்பாளர்களை தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாகவும், அதன்பின் உறுதியான பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!
இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!