2019 ஆண்டுக்கான கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் காரணம் குறித்து ஷாக்கிங் பதிவை வெளியீட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழிலும் ‛ஈ’, புலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அவருக்கு கர்நாடகாவில் மற்றுமின்றி தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பிற்கு கர்நாடக அரசு சார்பில் சிறந்த நடிகருக்கான விருது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான கன்னட திரையுலக சிறந்த நடிகர், நடிகைகள், பாடகர்களுக்கான விருதுகள் பட்டியலை தான் அறிவித்துள்ளது.
கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?
இந்த பட்டியலில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த 2019 ல் வெளியான பயில்வான் திரைப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த நடிகை, இசையமைப்பாளர் உள்ளிட்ட பலருக்கு விருது கிடைத்துள்ளது. இப்படி இருக்கையில் கிச்சா சுதீப் அந்த விருதை வாங்க மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ” எனக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.
ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
என்னை தேர்வு செய்த குழுவுக்கு மனமார்ந்த நன்றி. கடந்த பல ஆண்டுகளாக விருதுகள் எதையும் பெறக்கூடாது என்ற முடிவில் நான் இருக்கிறேன். இது நான் தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்த முடிவு. அதை தொடர விரும்புகிறேன். என்னை போல் பல நடிகர்கள் அர்ப்பணித்து வருகின்றனர். எனவே இதை நான் பெறுவதை விட, அவர்கள் பெறுவதே எனக்கு சந்தோசமாக இருக்கும் என்று ஷாக்கிங் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!