தற்போது நடைபெற்று வரும் 45 நாள் மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய கூட்டமாக கருதப்படும் 45 நாள் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டில் இருந்து மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களில் 8.79 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அந்த வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ரசிகர் ஒருவர் மகா கும்பத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!
அப்போது ஆர்சிபி இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று, RCB அணியின் ஜெர்சியை மூன்று முறை தண்ணீரில் நனைத்து வேண்டி கொண்டார். குறிப்பாக IPL சீசன் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை ஒரு கப் கூட அடிக்கவில்லை, ஏன் சொல்ல போனால், RCB பலமுறை இறுதிப் போட்டியை எட்டிய போதிலும், ஐபிஎல் கோப்பையை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் கோபத்தில் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?
அதனால் இந்த முறை எப்படியாவது கோப்பையை RCB கைப்பற்ற வேண்டும் என்று, ரசிகர்கள் பலரும் வேண்டி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவை பார்க்க எவ்வளவு சிரிப்பு வந்தாலும், RCB ரசிகர்களின் வேதனையும் வெளிக்காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!
சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!