Home » செய்திகள் » தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!

தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!

தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!

தற்போது தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல் குறித்து மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், தற்போது தான் குறைய ஆரம்பித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில தொற்று நோய்களும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது,  தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சல் மக்களிடையே வெகுவாக பரவி வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அது போக, பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடந்தூர்,  நத்தம் மற்றும் ஆத்துர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதன்படி, இதுவரை 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல், உடம்பு வலி, தசை வலி, தலைவலி,  வாந்தி, தொண்டை புண் உள்ளிட்டவைகள்  இதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஒட்டுண்ணிகள் போல் வாழும் ஒரு வகை பூச்சிகள் கடிப்பதால் தான் இந்த காய்ச்சல் உருவாகும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலை சரியான நேரத்தில் குணப்படுத்த முடியாமல் போனால், உயிரிழப்பு கூட நேரிடலாம் என்ற அபாயம் இருக்கிறது. அதன்படி, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த  பழனிசாமி (61) என்பவர் இந்த உண்ணி காய்ச்சலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top