முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) புதிய மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 கல்வி ஆண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 வீதம் 2000 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
Ph.D புதிய மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி ஊக்கத்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
தகுதிகள்:
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த மாணவர்கள் இந்த கல்வி ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
- மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பான ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- முதுகலைப் பட்டப் படிப்பில் 55% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு வயது 50 மிகாமலும் அதே போல் பெண்களுக்கு 55 மிகாமலும் இருக்க வேண்டும்.
- அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில், அறிவியல் முன்னேற்றம் (Advance Science), மருத்துவம் (Medical) மற்றும் தொழில்நுட்பம் (Technology) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- சாதி சான்று
- வருமானச் சான்று
- கல்விச் சான்று
- ஆதார் கார்டு
- முனைவர் பட்டப்படிப்பிற்கான நுழைவு சான்று
எப்படி விண்ணப்பிப்பது:
- இந்த ஊக்கத்தொகையை பெற தகுதியுள்ளவர்கள் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== என்ற இணைப்பில் இருக்கும் புதிய மாணவர்களுக்கு 2024-25 கல்வி ஆண்டிற்கு வெளியிட்டுள்ள விண்ணப்பத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- எனவே முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் தகுதி உள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்கள் வந்து 28.02.2025 மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
ஆதிதிராவிடர் நல ஆணையரகம்,
எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை – 600 005.