2025 ஆம் ஆண்டு தைபூசம் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. கருணை கடவுள் முருகனின் தைப்பூச விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தான் தை மாதம் வரக்கூடிய தைப்பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான நாளை தான் தைப்பூசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி இந்த நாளில் தான் அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. இந்த நாள் முருகனுக்கு மட்டுமின்றி, சிவ பெருமானுக்கும், குரு பகவானுக்கும் கூட சிறப்புடையதாகும்.
மேலும் இந்த தைப்பூசம் நாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த தைப்பூசம் நாளில் விரதம் எப்படி இருப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தைப்பூச நாளில் விரதம் இருக்கும் பக்தர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் முருகனை நினைத்து நெற்றியில் திருநீறு அணிந்து, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், கந்த கலிவெண்பா, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவைகளை மாலை வரை மனதார படிக்கலாம்.
எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
மேலும் நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் கந்தனை காலையிலேயே பூஜித்து வணங்கி விட்டு நாள் முழுவதும் முருகனை நினைத்து “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே தங்களுடைய வேலைகளை செய்யலாம்.
அந்த நாளில் காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது. குறிப்பாக முருகனின் ஆயுதமான வேலை தினமும் வழிபடுவது நல்லது.
அப்படி, வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது என்பது ஐதீகம். பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.
இன்றைய ஆன்மிக செய்திகள் Devotional News and Update
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – தேதி குறித்த அறநிலைத்துறை!
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா? இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்!
திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!
கண்டுகொண்டேன் முருகா வந்தது யார் என்று கண்டுகொண்டேன் – முருகர் யுகம் ஆரம்பமே!