![சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம்](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/சிவராத்திரி-2025.webp)
சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம்: ஒரு ராத்திரி என்றாலும் அது சிறப்புடைய ராத்திரியாகும். சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள திருநாட்கள் மூன்றாகும். அவை மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை மற்றும் திருவாதிரை ஆகியவையாகும். இந்த நாடுகள் பழமைச் சிறப்பை பல ஆலயக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனர் ஆலய முகப்பு மண்டபத்தில் சிவராத்திரி நாளில் விஜயநகர வேந்தர் ஒருவர் அந்த மண்டபத்தை அக்கோயிலுக்கு வழங்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவராத்திரி வழிபாட்டுக்காக சோழ மன்னன் ஒருவன் திரவிய தானம் அளித்ததாக திருச்சி கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம்
திருவள்ளூரை அடுத்த திருப்பாசூரில் உள்ள சிவாலயக் கல்வெட்டு அந்நாளில் ஆடும் அழகனுக்கு ஆதிரை விழா எடுக்கப் பெற்றதை அறிவிக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள மற்றொரு கல்வெட்டு சோழ வேந்தன் குலோத்துங்கனின் முப்பத்து நான்காம் ஆண்டில் தில்லையம்பல விழுப்பறையன் என்பவன் நடராஜப் பெருமானுக்கு ஆதிரை நாளன்று அபிஷேகம் செய்விப்பதற்காக நிலமளித்த செய்தியை கூறுகின்றது.
இக்கல்வெட்டுகள் யாவும் பல நூறு ஆண்டுகள் சிவனுக்குரிய திருவிழாக்களும், நட்சத்திரங்களும் எவ்வளவு முக்கியமானவை, அவற்றை அரசர்களும் எவ்வாறெல்லாம் கொண்டாடிச் சிறப்பித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றன.
சில வழிபாடு காலத்தை வென்று ஞானத்தில் நிலை கொண்டதாகும்.அவலங்களை விரட்டி அருள் ஒளியை அடைய அந்த ஞான மூர்த்தியையே வழிபட வேண்டும். அதிலும் சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களில் வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகவும்.
அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஆறு காலங்களும் அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை நல்கும். முக்தி கிடைக்கும். முக்தியை நல்கக்கூடிய முழுமுதற் கடவுள் சிவபெருமானே ஆவார்.
சிவராத்திரியன்று இரவில் சிவபெருமானுக்கு நடக்கும் பாலாபிஷேகம் போன்ற பல அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்வதும், உபவாசம் இருந்து வழிபடுவதும் மிகுந்த புண்ணிய பலன்களை அளிக்கும்.
தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் மற்றும் அதன் சிறப்புகள் !
சிவபெருமானின் திருவுருவத்தின் மேல் அன்னத்தை(வெறும் வெள்ளை சோறு) அப்பி நைவேத்தியம் செய்து அதை எடுத்து குளங்களில் உள்ள மீன்கள் சாப்பிட விடுவார்கள். மகரிஷிகள் மீன்களாக இருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
நமது முன்னோர்கள் புண்ணிய கைகாரியங்களை எவ்வளவு மென்மையாக கையாண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். சில பெரிய சிவ ஸ்தலங்களில் இது நிகழும் இதற்கு அன்னாபிஷேகம் என்று பெயர்.
இவற்றிலும் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு. மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.
சிவராத்திரி 2025 கதை:
ஒரு கற்பத்தின் முடிவு காலம். அப்போது சிவபெருமான் பிரளயத்தை உண்டாக்கினார். அதனால் உலகம் அழிந்தது. பிரம்மா முதல் சகல ஜீவராசிகளின் உயிர்களும் ஒடுங்கியிருந்தன. எங்கும் இருள் மயமாகியிருந்தது. சிவபெருமானும், உமாதேவியாரும் எஞ்சி நின்றார்கள்.
அந்த இருளில் உயிர்கள் உய்யும் பொருட்டு, உமா தேவியார் நான்கு ஜாமங்களிலும்( இரவின் முதல் நான்கு பகுதிகள்) சிவபெருமானை முறைப்படி பூஜித்தார்.
மீண்டும் உலக சிருஷ்டி ஏற்பட்டது. அது விடியற்காலை நேரம். உமா தேவியார் சிவபெருமானை வணங்கி, அந்த இரவை சிவராத்திரி என கொள்ளும்படி வேண்டினார். மேலும் அந்நாளில் இறைவனை முறைப்படி பூஜிப்பவர்களுக்கு முத்தி முதலான எல்லா நன்மைகளையும் அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இதுவே சிவராத்திரி தோன்றிய முறையாகும்.
உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !
சிவராத்திரி 2025 தத்துவம்:
ஊழிக் காலத்தில் ஒடுங்குவதும், பெருமான் மீண்டும் திருவுள்ளம் கொள்ள உண்டாவதும்(சிருஷ்டிப்பதும்) இயல்பே. இது எப்படி என்றால் கிராமத்தில் கண்மாயில் அல்லது பெரிய ஏரியில் முற்றும் தண்ணீர் வற்றிவிடும். பூமி பாளம் பாளமாக வெடித்து கிடக்கும். மழை வந்து மீண்டும் கண்மாயில் தண்ணீர் நிரப்பி விடும். சில தினங்களில் அதில் மீன் குஞ்சுகள் விளையாடும்.
அந்த கண்மாய்க்கு அந்த மீன் குஞ்சுகள் எப்படி வந்தன? யாரும் கொண்டு வந்து விட்டார்களா? இல்லை. அதில் ஏற்கனவே மீன் குஞ்சுகளும் இல்லை, பாளம் பாளமாக வெடித்து கிடந்த பூமியில் மீன் குஞ்சுகள் ஏது?
ஆனாலும் அந்த மண்ணில் மீன் கரு இருந்தது. நீர் வந்தவுடன் அந்த கரு உருப்பெற்றது. அது எப்படி கண்ணனுக்கு தெரியாமல் கருத்துக்கு மட்டும் புரிகிறதோ அதே போன்றுதான் ஊழிக்காலத்தில் உலகம் இறைவனிடம் ஒடுங்கியிருப்பதும், மீண்டும் விருந்து விடுவதுமாகும். இக்கருத்தை கவியரசர் கம்பர் ஒரு பாட்டில் ஓய்யாரமாக உரைப்பார்.
சிவராத்திரி 2025 தோத்திரங்கள்:
“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்
அண்ணவர்க்கே சரண் நாங்களோ”
சிவராத்திரி 2025 பாடல் கருத்து:
” உலகங்கள் எல்லாவற்றையும் தன்னிலிருந்து ஆக்கித்தான் அவற்றில் எல்லாம் நிறைந்திருக்கும் தன்மையோடு கூடிய வரும், அவற்றை நிலை நிற்கும் வண்ணம் உறுதி செய்து காப்பவரும், தன்னிலிருந்து அவ்வுலங்கங்களை நீக்கி மறையச் செய்பவரும், இக்காலகட்டங்களில் அவ்வுலகங்களில் தன்மையிலிருந்து தான் நீக்காமலும் இருக்கக்கூடிய ஒப்பற்ற வினோதத் திருவிளையாட்டை உடைய அவரே எல்லா உலகங்களுக்கும் தலைவர். இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவருக்கே நாம் அனைவரும் நம்மை ஒப்புக் கொடுப்போமாக” என்பது தான் இந்த பாடலின் திரண்ட கருத்தாகும்.
இத்தகைய தலைவன் சிவபெருமானே, எட்டு வகை குணங்களை உடையவன். எண்குண பஞ்சரனே என்று நூல்கள் பேசும். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருளாகும். அன்பாக, அருட்ஜோதியாக, இன்பமாக, ஈஸ்வரனாக, மங்களமாக, மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் சிவபெருமான் ஒருவனே.
தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !
வேதங்களிலும், உபநிடதங்களிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களை துடைப்பவன் என்று பொருள். பசுபதி, பூதபதி, பூதநாதர் என்பவை வேதங்கள் ருத்திரனுக்கு சூட்டும் சிறப்பு பெயர்களாகும்.
சிவன் உக்கிர வடிவினன், ஜடாமுடி கொண்டவன், நோய்களை தீர்ப்பவன், பல வடிவங்கள் கொண்டவன் என்று ரிக் வேதத்தின் பிற்கால சூத்திரங்கள் வர்ணிக்கின்றன.
சில வழிபாட்டின் மகிமையை முதன் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா – சுவேதாஉடநிடதமாகும். யஜுர் வேதம் நமசிவாய என்று முழங்குகிறது. மகாபாரதம் சிவபெருமானின் ஆயிரம் நாமங்களை சில சகஸ்ர நாமத்தை கூறுகிறது.
ஆதிசங்கரர் அருளிய ” சிவானந்தலஹரி” வியாசர் அருளிய “சிவபுராணம்” அப்பைய தீட்சிதரின் ” சிவார்க்கமணி தீபிகா” ஆகியவை ஒப்பற்ற சிவபக்தி நூல்கள்.
மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. தித்திக்கும் தேன் தமிழாகும் திருவாசகம். அதிலும் திருவெம்பாவை கருத்தும், கனிவும் மிக்க கற்கண்டு பெட்டகம். சிவபுராணம் வடமொழி நூல்களின் சிறப்பையெல்லாம் தன்னகத்தே கொண்டு விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகியவற்றின் சாரமாக திகழும் வெல்லப் பாகு.
மூவர் அருளிய தேவாரம் இனிய இசைத் தமிழ், தமிழ் மக்களை ஈடேற்ற வந்த மறை. சிவன் பஞ்சபூதத் தலங்களாகிய திருவாரூரில் பூமி வடிவமாகவும், காளஹஸ்தியில் காற்று வடிவமாகவும், திருவண்ணாமலையில் அக்னி வடிவமாகவும், சிதம்பரத்தில் ஆகாய வடிவமாகவும், திருவானைக்காவலில் நீர் வடிவமாகவும் எழுந்தருளி உள்ளான். லிங்க தத்துவம் மிகப்பெரிய அறிய விஷயமாகும், சிவபெருமானைப் பற்றி விவரித்தால் அக்கட்டுரை அவனளவே பெருகும்.
சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் !
சிவராத்திரி 2025 பலன்:
சிவராத்திரி தினத்தில் உபவாசமிருந்து மேற்சொன்ன நூல்களில் அவரவர்களுக்கு உகந்ததை பாராயணம் செய்தால் அவன் அருள் நமக்கு நிச்சயம் கிட்டும்.
நமக்கு அருள் வழங்கவே அவன் காத்திருக்கிறான். அவன் வீடு ஒன்று தான் நமக்காக எந்த நேரமும் கதவுகள் திறந்திருக்க கூடியவை. அவன் இதயம் ஒன்று தான் பக்தி என்ற எளிமையான வாடகை கொடுத்துப் பிடிக்கக்கூடியது. அவன் ஒருவன் தான் நம்மைக் கடைத்தேற்ற வல்லவன். அவனையன்றி நமக்கு நற்கதி இல்லை. அவனருளாலே அவன் தாள் வணங்குவோம்.
: Shivaratri 2025 date and Time: சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம் – 26 February 2025
தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !
மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள், எங்கெங்கு உள்ளது வாங்க பாக்கலாம் !
ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை தரும் நன்மைகள் எத்தனை தெரியுமா ?
திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?
மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !