Dragon Movie Review: பிரதீப்பின் டிராகன் திரைவிமர்சனம்: கோமாளி, லவ் டுடே இயக்கிய பிரதீப்பின் டிராகன் எப்படி உள்ளது என்பது திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் தான் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரதீப் உடன் சேர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர். எனவே இன்று வெளியான இந்த படம் வெற்றி கனியை ருசித்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரைவிமர்சனம்:
கதையின் ஹீரோவான பிரதீப் நன்றாக படிக்கும் மாணவனாய் இருந்து 12ம் வகுப்பில் 96% எடுத்து மெரிட்டில் ஒரு கல்லூரிக்கு செல்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பள்ளி படிக்கும் பொழுது அவர் காதலை ஒரு பெண் நிராகரிக்கிறாள். இதனால் நல்ல படிக்கும் மாணவனாக இருந்த பிரதீப் அடாவடி செய்யும் பையனாக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி, 48 அரியர் வைத்து அனுபமாவை காதலித்து வருகிறார். இன்னொரு பக்கம், ப்ரொபசர் மிஷ்கினை எதிர்த்து ஜாலி செய்து வருகிறார்.
பிரதீப்பின் டிராகன் எப்படி உள்ளது? முழு திரைவிமர்சனம் இதோ!!
இப்படியே கதை நகர்கிறது. கல்லூரி முடித்து அவருடைய நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்றாலும் கூட, நம் ஹீரோ மட்டும் வேலைக்கு போகாமல் பிக்பாஸ் பார்த்து கொண்டு காலத்தை கடத்தி செல்கிறார். இதனால் அனுபமா ஹீரோவை பிரேக் அப் செய்ய, அவர் முன்பு நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று, தவறான பாதைக்கு செல்கிறார். அதாவது போலி சான்றிதழை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தில் 3 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். ஒரு நாள் ப்ரொபசர் மிஷ்கின் ப்ரதீபை பார்த்து, போலி சான்றிதழ் குறித்து பேச, பிரதீப் காலில் விழுந்து கெஞ்சுகிறார். மேலும் எல்லா அரியரையும் கிளியர் செய்தால் விட்டு விடுகிறேன் என்று கூறுகிறார். அடுத்து அவர் பாஸ் ஆனாரா இல்லையா என்பது தான் மீதி கதை.
க்ளாப்ஸ்:
பிரதீப் சின்ன தனுஷ் போல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
எல்லா நடிகர், நடிகைகள் நடிப்பு அற்புதமாக உள்ளது.
படத்தில் டெக்னிக்கல் விஷயங்கள் கூடுதல் பலனை கொடுத்துள்ளது.
இரண்டாம் பாதி, எமோஷனல் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.
ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்.., ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!
Dragon Movie Review பல்ப்ஸ்:
அங்கங்கே கெட்ட வார்த்தை சில கிளாமர் காட்சிகள் உள்ளது.
இந்த படத்திற்கு 5 க்கு 3.5 கொடுக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் திரிஷா?.., ஒரு வேலை இருக்குமோ!!
கணவரை விவாகரத்து செய்த பைரவா பட நடிகை.., இத கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல!!
கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?