இயக்குநர் நெல்சன்:
ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் நெல்சன்: ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் நெல்சன். இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் மூலம் முன்னணி இயக்குனராக தற்போது வலம் வந்துகொண்டிருக்கிறார். அத்துடன் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக தற்போது மாறியுள்ள நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் நெல்சன்:
இதனையடுத்து ‘ஜெயிலர்-2’ படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்க போகிறார்? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கைகோர்ப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதனை ஜூனியர் என்.டி.ஆரும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர்., ‘நெல்சன் இயக்கத்தில் படம் நடிக்க ஆசைப்படுகிறார். நாக வம்சி (முன்னணி தயாரிப்பாளர்) மனது வைத்து வேகமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்’, என்று குறிப்பிட்டார்.
தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
விரைவில் அறிவிப்பு:
இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாக போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.