Home » வேலைவாய்ப்பு » SDAT கூடைப்பந்து பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!

SDAT கூடைப்பந்து பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!

SDAT கூடைப்பந்து பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!

SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாட்டில் விளையாட்டில் முதன்மை மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழுத்திறனுடன் அணுகவும், மேலும் அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் நியமனம் செய்து வீரர்கள் / வீராங்கனைகளுக்கு பயிற்ச்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டந்தோறும் விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

கூடைப்பந்து பயிற்சியாளர் – பல்வேறு

Rs.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

இம்மையத்தில் கூடைப்பந்து பயிற்ச்சியாளராக பயிற்ச்சி வழங்கிட கூடைப்பந்து விளையாட்டில் தேசிய விளையாட்டு நிறுவனம் அல்லது இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட முதுநிலை பயிற்ச்சி சான்றிதழ் அல்லது ஒரு வருட டிப்ளமோ / சான்றிதழ் பயிற்ச்சி அல்லது தமிழ்நாடு உடற்க்கல்வி பல்கலைக்கழத்தில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது சர்வதேச கூட்டமைப்பால் வழங்கப்பட்ட உரிமம் படிப்பு அல்லது நேதாஜி சுபாஷ் விளையாட்டு நிறுவனத்தில் வழங்கப்பட்ட 6 வார சான்றிதழ் படிப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்

பயிற்றுநர் வயது 50 க்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சிவகங்கை மாவட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட கூடைப்பந்து பயிற்ச்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

20.04.2025 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்

நேர்முகத்தேர்வு சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். அத்துடன் உடற்தகுதி, விளையாட்டு திறன், பெற்ற பதக்கங்கள் மற்றும் பயிற்ச்சி வழங்கும் திறன் போன்ற வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top