2025 மே 1 முதல் FASTag கிடையாது, GPS மட்டுமே – இந்திய முழுவதும் எடுக்கப்படும் டோல்கேட்!!!
தற்போது நெடுஞ்சாலை பயனர்களின் கவனத்திற்கு, 2025 மே 1 முதல் ஃபாஸ்ட்டேக் FASTag கிடையாது. வரும் மாதங்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில் ஜிபிஎஸ் GPS மட்டுமே டோல் கட்டண முறை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த GPS கட்டண முறை வந்தவுடன் ஃபாஸ்ட்டேக் முறை நீக்கப்பட இருதாக இந்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான கட்டண வசூலை தொடங்க உள்ளது. இதன் அடிப்படையில் ஜிபிஎஸ் என்று அழைக்கப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) டோலிங் முறை, தற்போதைய FASTag சுங்க கட்டண முறைக்கு பதிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் டோலிங் (GPST):
இந்த முறையின் அடிப்படையில் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளர்கள், ப்ரீபெய்ட் (prepaid) அல்லது வங்கி சேமிப்புக் கணக்குடன் (saving bank accounts) இணைக்கப்பட்ட அல்லது நேரடியாக டோல் உரிமையாளரிடம் இருந்து கட்டணத்தை செலுத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, ஜிபிஎஸ் டோல் கட்டண முறையின் மென்பொருளின் (software) வளர்ச்சி மற்றும் சுங்கவரி வசூலிப்பதற்கான தேவையான தொழில்நுட்பம் (technology) இந்த அம்சத்தில் இருக்கிறது. குறிப்பாக, இதில் உள்ள முக்கிய சிறப்பம்சமே நெடுஞ்சாலைகளில் இனி சுங்கச்சாவடியே (toll gates) தேவைப்படாது என்பது தான் ஜியோபென்சிங் (geo-fencing) செயல்படுத்தி, வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தம் செய்யாமல், கட்டணங்களை வசூலிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதுமையான அமைப்பின் முதன்மை நோக்கம் என்னவென்றால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பிஸிக்கல் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவதன் (removing toll gates in India) மூலம் சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைப்பதாகும்.
இதையும் தெரிஞ்சுக்கோங்க: நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்
அத்துடன் சில வாகனப் பயனர்கள் (Vehicle users) பயணித்த சரியான தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், இந்த முறை சிறந்ததாக கருத்தப்படுகிறது. குறிப்பாக வாகனங்களின் துல்லியமான இருப்பிடத்தை இது ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பதால், தனியுரிமைக் (privacy) கவலைகளை வெளிப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஜிபிஎஸ் டோல் கட்டண முறையை பைலட் சோதனையாக குறிப்பிட்ட சில இடங்களில் NHAI விரைவில் சோதனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான சாப்ட்வேர் தற்போது வளர்ச்சி கட்டத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
GPS டோல் கட்டணம் செலுத்தும் முறை:
மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ள இந்த புதிய ஜிபிஎஸ் சுங்க கட்டண முறைப்படி, பழைய வாகனங்களில் மக்கள் புதிய ஜிபிஎஸ் கருவியை (GPS device) பொருத்த வேண்டும். அத்துடன் தற்போது வரும் புதிய வாகனங்களில் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்களுடன் வருகிறது என்பதனால் தனியாக ஜிபிஎஸ் சாதனங்களை மக்கள் பொறுத்த அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஜியோ-ஃபென்சிங் முறையில் சம்மந்தப்பட்ட இடங்களுக்குள் வாகனம் உள்நுழைந்து வெளியேறும் போது கட்டணம் தானாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக, NHAI மற்றொரு மாற்று அணுகுமுறையையும் ஆய்வு செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.
என்னவென்றால் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் வாகன நுழைவு மற்றும் வெளியேறும் முறை கண்காணிக்கப்படும் என்றும் ஆனால், இங்கு GPS கருவிகளுக்கு பதிலாக, சுங்கவரி வசூல் செய்ய அனுமதிக்கும் தானியங்கி நம்பர் பிளேட் முறையை NHAI பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.