டெல்லியில் ஜி-20 மாநாடு 2023 இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கின்றது. மாநாடு நடைபெறும் கூடத்தின் முன் தமிழகத்தில் செய்யப்பட்ட நடராஜர் சிலை கம்பிரமாக வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பெருமையை சொல்லும் நடராஜர் சிலை ரூ.10 மதிப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சிலையின் ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை ஜி-20 மாநாட்டில் நடராஜர் சிலையின் விலை தெரிந்து கொள்ளலாம்.
நடராஜர் சிலையின் சிறப்பு :
சிவபெருமானின் நடராஜர் ரூபம் என்பது நடனக்கலையின் தெய்வமாக போற்றப்படுகின்றது. சிவபெருமானின் நடராஜர் உருவம் மதம் என்பதை கடந்து அறிவியலுடனும் தொடர்புடையது. சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூலவராக நடராஜர் இருக்கின்றார்.
சிவனின் பஞ்சபூத தளங்களில் ஆகாய தலமாகவும் இக்கோவில் விளங்கி வருகின்றது. மேலும் மனித உருவில் இக்கோவில் அமைக்கப்பட்டு இருப்பது தான் தனி சிறப்பு. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தளமான நாசாவில் 17 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
சிலையை உருவாக்கியவர்கள் யார் :
டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறும் கூடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நடராஜர் சிலையை உருவாக்கியவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இம்மாவட்டத்தில் இருக்கும் சுவாமிமலை பகுதியை சேர்ந்த சேனாதிபதி சிற்பக்கலைக்கூடத்தினை சேர்ந்த ” ராதா கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ கண்டன் ” சகோதரர்கள் தான் சிலையை உருவாக்கியவர்கள் ஆவர்.
சிலையின் சிறப்பு :
பெரும்பாலும் செய்யப்படும் நடராஜர் சிலைகள் ஐம்பொன் கொண்டு தான் செய்யப்படுகின்றது. ஆனால் ஜி-20 மாநாட்டில் வைக்கப்பட்டு இருக்கின்ற சிலையானது ஆயிரம் ஆண்டுகள் வரையில் அழியாமல் இருக்கும் நோக்கில் எட்டு வகையான தாது பொருட்கள் பயன்படுத்தி சிலையானது செய்யப்பட்டுள்ளது. எட்டு வகையான தாது பொருட்களான செம்பு , பித்தளை , ஈயம் , தங்கம் , வெள்ளி , வெள்ளீயியம் , பாதரசம் மற்றும் இரும்பு போன்றவைகள் சேர்த்து செய்யப்பட்டு உள்ளது.
பாதரசம் , வெள்ளீயம் மற்றும் இரும்பு மூன்றும் சேரும் போது உலோகம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் கடினத்தையும் பாராமல் சிலை செய்யும் போது சிலையானது பல ஆண்டு நூற்றாண்டுகள் வரையில் எந்த ஒரு சேதாரமும் ஆகாமல் இருக்கும். வழக்கமாக இருக்கும் நடராஜர் சிலையில் 27 சுடர்கள் அமைந்திருக்கும். ஆனால் ஜி-20 மாநாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிலையில் 51 சுடர்கள் அமைந்துள்ளது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
சிலையின் உயரம் :
உலக தலைவர்களை கவரும் படி ஜி-20 மாநாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் எட்டு வகையான தாது பொருட்கள் கொண்டு செய்யப்பட்டு உள்ளது. இந்த சிலையானது 28 அடி உயரம் மற்றும் 21 அடி அகலம் கொண்டு 18 டன் எடையில் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நடராஜர் சிலை தான் உலகின் மிக உயரமான நடராஜர் சிலையாக இருக்கின்றது. மேலும் 8 டன் எடையில் சிலையின் பீடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தஞ்சை மண்ணில் இருந்து நாட்கள் பயன்படுத்தி கடந்த மாதம் 28ம் தேதி அன்று டெல்லி கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
சிலை செய்ய பணியாற்றிய நபர்கள் யார் :
சோழர்களின் காலத்தில் இருந்து 34 தலைமுறைகளாய் சிலைகளை செய்து வரும் ராதா கிருஷ்ணன் தபதி குழுவினர் 50க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சிற்ப சாஸ்திர முறைகளை சரியாக பயன்படுத்தி உலகே வியக்கும் நடராஜர் சிலை செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வர் சிலை தொடக்கி சோழர் காலத்து சிலைகள் வரையில் செய்தவர்கள் இவர்களின் தலைமுறைகளை சேர்ந்தவர்கள் தான். உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை சுமார் ஏழு மாதங்கள் செலவிடப்பட்டு செய்யப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் நடராஜர் சிலையின் விலை
பெரும்பாலும் கோவில்களில் வைக்கப்பட்டு இருக்கும் குபேரர் , விஸ்ணு , கிருஷ்ணர் , ராமர் , முருகன் மற்றும் லட்சுமி சிலைகள் அஷ்டதாதுக்கள் பயன்படுத்தக்கூடாது என்பது விதி.
தமிழகத்தின் பெருமையை சொல்லும் நடராஜர் சிலையானது தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நடராஜர் சிலையை பிரதிபலிக்கும் வகையில் அஷ்டதாதுக்கள் பயன்படுத்தி ஜி-20 மாநாட்டில் நடராஜர் சிலையின் விலை சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டு உள்ளது.
வாய்ப்பு கிடைத்தது எப்படி :
ராதா கிருஷ்ணன் தபசு இவர்களின் தந்தை ஜனாதிபதி விருது பெற்றவர். இவர்கள் பாரம்பரிய முறைகளின் படி 9 தலைமுறைகளாக பஞ்சலோக சிலை செய்து வருபவர்கள். சுவாமிமலை பஞ்சலோக சிலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மத்திய அரசின் கலாச்சரத்துறையின் கீழ் இயங்கும் இந்திராகாந்தி தேசிய கலை மைய அதிகாரிகள் 28 அடி உயர சிலை செய்ய வேண்டும் என்று இவர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
இவர்களும் நடராஜர் சிலை செய்வதற்காக டெண்டர் போட்டுள்ளனர். இவர்களை போன்று இந்தியாவில் இருந்து பலர் டெண்டர் அளித்த நிலையில் இவர்களின் சிலை மாதிரி படம் அமைப்பிற்கு பிடித்துப்போக இவர்களை சிலை செய்வதற்காக தேர்வு செய்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடம் :
இந்தியாவின் தலைநகரமாய் இருக்கும் டெல்லியில் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கின்றது. செப்டம்பர் 9 மற்றும் 10 தேதியில் நடைபெற இருக்கின்ற இம்மாநாட்டில் உலகின் பல தலைவர்கள் கலந்து இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டு உள்ள நடராஜர் சிலையானது நம்முடைய வளமான கலாச்சரம் , வரலாற்று பாரம்பரியங்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.