இந்திய ரிசர்வ் வங்கியானது 1935ம் ஆண்டு முதல் இந்தியாவில் வங்கி சேவையை இந்திய அரசின் கீழ் செய்து வருகிறது. இந்த வங்கியில் மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. RBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட இருக்கின்றனர். எனவே காலியாக இருக்கும் மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , அனுபவம் , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் கீழே அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2023
அமைப்பின் பெயர் :
RBI – Reserve Bank of India இந்திய ரிசர்வ் வங்கியானது மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவில் 76 கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இந்திய ரிசர்வ் வங்கியில் Bank’s Medical Consultant வங்கி மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு வங்கி மருத்துவ ஆலோசகர் பணியிடம் RBI வங்கியில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித்தகுதி :
BMC பணிகளுக்கு விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் அலோபதி மருத்துவ முறையில் பெற்று இருக்க வேண்டும். மேலும் பொது மருத்துவம் ( General Medicine) துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் :
RBI வங்கியில் காலியாக இருக்கும் வங்கி மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மருத்துவ பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனைகளில் பணி செய்து இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
BMC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு விண்ணப்பிக்க வயது தகுதி குறிப்பிடப்படவில்லை.
சம்பளம் :
RBIல் தகுதியான வங்கி மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,000 வீதம் மாதத்திற்கு ஒரு முறை ஊதியமானது வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
வருகின்ற செப்டெம்பர் மாதம் 18ம் தேதி காலை 11 மணிக்குள் வங்கி மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தபால் மூலம் தங்களின் விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டு
OFFICIALNOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
பிராந்திய இயக்குநர் ,
இந்திய ரிசர்வ் வங்கி ,
ஹோஷங்காபாத் சாலை ,
போபால் – 462011 ,
இந்தியா .
விண்ணப்பக்கட்டணம் :
RBI வங்கியில் காலியாக இருக்கின்ற வங்கி மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக இருக்கும் வங்கி மருத்துவ ஆலோசகர் ( BMC ) பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
1. RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் மேலே இருக்கும் லிங்க் பயன்படுத்தி விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் அனைத்து தகவல்களையும் வாசித்து சரியாக பதில் அளிக்க வேண்டும்.
3. விண்ணப்ப படிவத்துடன் வயது சான்றிதழ் , கல்வி சான்றிதழ் , சாதி சான்றிதழ் , இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு சான்றிதழ் இவைகளின் ஜெராக்ஸில் சுயமாக கையொப்பம் இட்டு தபால் மூலம் குறிப்பிடப்பட்டு இருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.