SBI வங்கி இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றாக இந்தியாவின் பல இடங்களில் மக்களுக்கு வங்கி சேவையை வழங்கி வருகின்றது. பிராபலமான வங்கிகளில் ஒன்றாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023 காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களுக்கு இருக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை , விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வோம்.
SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023
நிறுவனத்தின் பெயர் :
State Bank of India பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா முழுவதும் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
Probationary Officer ( PO ) தகுதிக்காண் அதிகாரிகள் பணியிடங்கள் SBI வங்கியில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
2000 PO காலிப்பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக இருக்கின்றது என்று வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
மீன்வளத்துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 !
வயதுத்தகுதி :
இந்தியா முழுவதும் SBI வங்கியில் காலியாக இருக்கும் PO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் ,
1. SC / ST – 5 ஆண்டுகள்
2. பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் – 3 ஆண்டுகள்
3. PwBD ( SC/ST ) – 15 ஆண்டுகள்
4. PwBD ( OBC ) – 13 ஆண்டுகள்
5. PwBD ( Gen / EWS ) – 10 ஆண்டுகள்
6. முன்னாள் ராணுவத்தினர் – 5 ஆண்டுகள் வரையில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் :
SBI வங்கியில் காலியாக இருக்கும் PO பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி ரூ. 36,000 முதல் ரூ. 63,840 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
07.09.2023 முதல் 27.09.2023 வரையில் PO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
PO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய தகுதியான நபர்கள் கீழே இருக்கும் இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
1. பொதுப் பிரிவினர் / EWS / OBC – ரூ. 750 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
2. SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவை இல்லை.
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்தியா முழுவதும் இருக்கும் POக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் மூன்று முறைகளின் படியே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர்.
1. முதல் நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. உளவியல் சோதனை , குழு பயிற்சிகள் , நேர்காணல்
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவைகள் இணையதளத்தின் மூலம் நடைபெறும்.
முக்கிய தேதிகள் :
1. விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.09.2023
2. முதல் நிலைத் தேர்வு – நவம்பர் ( 2023 )
3. முதன்மைத் தேர்வு – டிசம்பர் ( 2023 ) அல்லது ஜனவரி ( 2024 )
4. உளவியல் சோதனை – ஜனவரி / பிப்ரவரி ( 2024 )
5. குழு பயிற்சிகள் , நேர்காணல் – ஜனவரி / பிப்ரவரி ( 2024 )
6. இறுதி முடிவுகள் – பிப்ரவரி / மார்ச் ( 2024 )
விண்ணப்பிக்கும் நிலைகள் :
1. மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க் பயன்படுத்தி SBI PO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பக்கத்திற்கு செல்லலாம்.
2. SBI வேலைவாய்ப்பு தளத்தில் விண்ணப்பதாரர்கள் முன்னரே பதிவு செய்திருந்தால் பதிவு எண் , பாஸ் வேர்டு மற்றும் code பதிவிட்டு PO பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
3. இல்லையென்றால் SBI வேலைவாய்ப்பு தளத்தில் முதன் முறை பதிவு செய்கின்றோம் என்றால் மேலே இருக்கும் நியூ ரெஜிஸ்ட்ராக்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
4. முதலில் விண்ணப்பதாரர்கள் பெயர் , மின்னஞ்சல் முகவரி , மொபைல் எண் , பாதுகாப்பு குறியீடு போன்றவைகளை சரியாக பதிவு செய்த பின் save & next கொடுக்க வேண்டும்.
5. பின்னர் இணையதளம் மூலம் புகைப்படம் & கையெழுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
6. பின்னர் நாம் பதிவு செய்த அனைத்து விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
7. பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
8. PO காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணத்தினை செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
9. PO பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நெருங்கி வரும் நிலையில் முழு கவனமாக படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.