CLRI மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு 1948ம் ஆண்டு முதல் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. கான்பூர் , அகமதாபாத் , ஜலந்தூர் மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களிலும் கிளை மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் தோல் பதனிடுதல் துறைகளில் கல்வி , ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் படி CLRIல் சென்னை வேலைவாய்ப்பு 2023 ல் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் நிரப்பப்பட இருக்கின்றனர். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வோம்.
மையத்தின் பெயர் :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் சென்னையில் காலிப்பணியிடம் இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஜூனியர் ஸ்டெனோகிராபர் ( Junior Stenographer ) பணியிடங்கள் இம்மையத்தில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஐந்து ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடம் காலியாக இருக்கின்றது.
1. UR பிரிவுகளில் – 3 காலிப்பணியிடங்களும்
2. OBC பிரிவுகளில் – 1 காலிப்பணியிடமும்
3. EWS பிரிவுகளில் – 1 காலிப்பணியிடமும் மொத்தமாக 5 காலிப்பணியிடம் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் ஸ்டெனோகிராபர் துறையில் DoPT முடித்திருக்க வேண்டும்.
SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023 ! 2,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயதுத்தகுதி :
காலியாக இருக்கும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் 27 வயதிற்குள் இருக்கலாம்.
1. OBC பிரிவினர்கள் – 3 ஆண்டுகள்
2. PwBD பிரிவினர்கள் – 10 ஆண்டுகள்
3. முன்னாள் ராணுவத்தினர் – 3 ஆண்டுகள் வரையில் இம்மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் :
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக அரசின் வழிமுறை நிலை 4ன் படி ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
வருகின்ற அக்டோபர் மாதம் 8ம் தேதிக்குள் (08.10.2023) ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
காலியாக இருக்கும் 5 ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. பொதுப்பிரிவினர் / OBC / EWS பிரிவினருக்கு – ரூ. 100 விண்ணபக்கட்டணம் செலுத்த வேண்டும்.
2. பெண்கள் / CSIR பணியாளர் / SC / ST / PwBD / ESM பிரிவினருக்கு – விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தேர்வு முறைகள் :
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் போட்டித்தேர்வு , திறன் தேர்வு மற்றும் சோதனை தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய நிலைகள் :
1. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு புதியதாக விண்ணப்பிக்கும் நபராக இருப்பின் நியூ ரெஜிஸ்ட்ரேஸன் கிளிக் செய்து பெயர் , முகவரி , மொபைல் எண் , மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை சரியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2. பின் விண்ணப்பதாரர்களின் புகைப்படம் , கையொப்பம் பதிவேற்ற வேண்டும்.
3. நாம் பதிவு செய்த அனைத்து விவரங்களும் சரி தானா என்பதை உறுதி செய்த பின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
4. இணையதளத்தின் மூலம் பதிவு செய்த விண்ணப்பபடிவத்தினை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பபடிவத்துடன் இணைக்கவேண்டியவை :
1. விண்ணப்பபடிவம்
2. 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு கல்வி சான்றிதழ்
3. SBI வங்கியில் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது
4. அனுபவ சான்றிதழ் போன்றவைகள் இணைத்திருக்க வேண்டும்.
போட்டித்தேர்வு வழிமுறைகள் :
1. 200 மதிப்பெண்களுக்கு தேர்வானது நடைபெறும்.
2. பொது நுண்ணறிவு & பகுத்தறிவு – 50 மதிப்பெண்கள்
பொது விழிப்புணர்வு – 50 மதிப்பெண்கள்
ஆங்கில மொழி & புரிதல் – 100 மதிப்பெண்களுக்கு போட்டித்தேர்வானது நடத்தப்படும்.
திறன் தேர்வு வழிமுறைகள் :
1. ஒவ்வரு 10 நிமிடங்களுக்கு ஒரு டிக்டேசன் ஆங்கிலம் அல்லது இந்தியில் கேட்கப்படும்.
2. ஆங்கிலம் – 70 நிமிடம்
இந்தி – 90 நிமிடத்திற்கு கேட்கப்படும் இதில் 80wp.m வேகத்தில் பதிலளிக்க வேண்டும்.
சோதனை தேர்வு :
ஸ்டெனோகிராபி சோதனையில் ட்ரான்ஸ்கிரிப்ட்களை மதிப்பீடு செய்து தவறுகளின் தன்மையை கண்டறிய வேண்டும்.
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு மூன்று முறைகளில் தேர்வு நடத்தப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். எனவே தேர்வுக்கு நன்கு படித்து ஆங்கிலம் அல்லது இந்தி மொழி நன்றாக அறிந்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு மட்டும் கவனம் செலுத்தாமல் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியிலும் பேசுவதர்க்கு பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.