மகளிர் உரிமைத்தொகை ரூ.1 டெபாசிட் உங்களுக்கு வந்துருக்கா. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பயனடைய விண்ணப்பித்த சுமார் 561/2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்டதன் காரணத்தினை அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் அளித்து இருக்கின்றனர். அரசு பணியாளர்கள் , வருமான வரி செலுத்தும் குடும்பங்கள் என தகுதி அற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. பயனாளர்களுக்கு தங்களின் வங்கி கணக்கிற்கு பணம் மற்றும் மொபைல் எண்ணிற்கு SMS வருகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள சோதனையானது தொடங்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1 டெபாசிட்
திமுக வாக்குறுதி :
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலின் போது திமுக கட்சியின் முக்கிய வாக்குத்திகளில் ஒன்றாக இருந்தது மகளிருக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது ஆகும். திமுக கட்சி ஆட்சியை பிடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் பல கேள்விகள் மக்களிடமும் எதிர்க்கட்சியில் இருந்தும் வந்தது.
செப்டம்பர் 15 முதல் :
அதன் படி கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது மகளிர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் ” கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ” திட்டம் என்ற பெயரில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தகுதியான மகளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழக முதல்வர் அவர்கள் திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பபடிவம் விநியோகம் :
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தகுதியான மகளிருக்கு மட்டுமே சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் விண்ணப்பபடிவம் தயார் செய்யப்பட்டது. தமிழக அரசின் மூலம் தயார் செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் ரேஷன் கடை பணியாளர்களைக் கொண்டு வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. விண்ணப்பபடிவம் நிரப்பும் பணியானது மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்று சுமார் 1 கோடியே 6 அரை லட்சம் மகளிர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி !
தொடக்க விழா :
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட இருக்கின்றது. முன்னரே அறிவித்தன் படி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற தமிழக முதலவர் தலைமையில் திட்ட தொடக்கவிழா நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் சுமார் பத்தாயிரம் நபர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் தொடக்க விழா நடைபெற இருக்கின்றது.
561/2லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
தொடக்க விழா நெருங்கி வரும் இந்த சூழலில் தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து இருந்த 56அரை லட்சம் பயனாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதன் படி ஒரு கோடி 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்து இருந்த விண்ணப்பங்களில் 65% விண்ணப்பங்களை அரசு ஏற்று 35% விண்ணப்பங்களை அரசு நிராகரித்து உள்ளது. இவ்வளவு விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது ஏன் என்று பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. அதற்கு தற்போது அரசு பதில் அளித்து உள்ளது.
அரசு கூறிய காரணங்கள் :
1. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் மேல் வருமானம் பெரும் குடும்பங்கள்.
2. அரசு பணியாளர்கள்
3. வங்கி பணியாளர்கள்
4. வாரியம் , உள்ளாட்சி அமைப்பு , கூட்டுறவு அமைப்பு பணியாளர்கள்
5. கார் , ட்ராக்டர் , ஜீப் போன்ற கனரக வாகனம் வைத்திருப்பவர்கள்
6. விதவை ஓய்வூதியம் , முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள்
7. அரசுக்கு வருமான கட்டும் மகளிர்
8. ஆண்டிற்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் போன்ற காரணங்களினால் அரசுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
3லட்சம் அரசு பணியாளர்கள் :
இந்த திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தாலும் சுமார் மூன்று லட்சம் அரசு பணியாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களிலும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
எப்போது கைக்கு வரும் :
திமுக ஆட்சியின் திட்டங்களில் மிகப்பெரிய திட்டமாகவும் அதிகளவில் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமாக இருக்கின்றது. செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டு குறைந்தது 5 நாட்களில் தகுதியான மகளிர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவே ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும். மேலும் இத்திட்டத்தில் பயனடைய யாரெல்லாம் தகுதியானவர்கள் யாரெல்லாம் தகுதியற்றவர்கள் என்பதற்கான குறுந்செய்தி அனைவருக்கும் வந்து விடும். பயனாளர்களின் தகுதியற்றவர்களுக்கான காரணமும் குறுந்செய்தியில் இடம்பெற்று இருக்கும்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1 டெபாசிட்
சோதனை தொடக்கம் :
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 6லட்சத்து 50ஆயிரம் பணியாளர்கள் வரும் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து பயனடைய இருக்கின்றனர். உரிமைத்தொகையானது மகளிர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பும் போது ஏதேனும் தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும். எனவே இத்திட்டத்தின் பயனாளர்களுக்கு ரூ.1 வங்கி கணக்கிற்கு செலுத்தி SMS குறுஞ்செய்தி சரியாக வருகின்றதா என்பதை உறுதி செய்யும் சோதனை நடைபெற்று வருகின்றது.