தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி ஊரக வளர்ச்சி துறையில் வேலை 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். எனவே மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அமைப்பின் பெயர் :
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. திடக்கழிவு மேலாண்மை & சுகாதார நிபுணர் ( Solid Waste Management & Sanitation Expert )
2. திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் ( Liquid Waste Management Expert )
3. திட்டமிடல் , ஒருங்கிணைப்பு , கண்காணிப்பு ( Planning Convergence Monitoring )
4. தகவல் , கல்வி , தொடர்பு ( Information , Education , Communication – IEC )
5. எம்ஐஎஸ் ஆய்வாளர் ( MIS Analyst )
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. திடக்கழிவு மேலாண்மை & சுகாதார நிபுணர் -2
2. திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் – 1
3. திட்டமிடல் , ஒருங்கிணைப்பு , கண்காணிப்பு – 1
4. தகவல் , கல்வி , தொடர்பு – 2
5. எம்ஐஎஸ் ஆய்வாளர் – 1
கல்வித்தகுதி :
1. திடக்கழிவு மேலாண்மை & சுகாதார நிபுணர் :
அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் பொறியியல் அல்லது சிவில் இன்ஜினியரிங் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
2. திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் :
சுற்றுசூழல் பொறியியல் / சிவில் இன்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும்.
3. திட்டமிடல் , ஒருங்கிணைப்பு , கண்காணிப்பு :
பி.டெக் , எம்பிஏ , எம்எஸ்சி போன்ற துறைகளில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
4. தகவல் , கல்வி , தொடர்பு :
மாஸ் கம்யூனிகேஷன் துறையில் முதுகலை பட்டம் , மாஸ் மீடியா துறைகளில் அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
5. எம்ஐஎஸ் ஆய்வாளர் :
பிஇ அல்லது பிடெக் துறையில் கணினி அறிவியல் / ஐடி / கணினி பயன்பாடு / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / இளங்கலை கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மீன்வளத்துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
அனுபவம் :
1. திடக்கழிவு மேலாண்மை & சுகாதார நிபுணர் :
சுற்றுசூழல் , கட்டுமானத்துறை , வாஷ் , எம்&இ , சாலிட் , திடக்கழிவு மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத்துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
2. திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் :
சம்பந்தப்பட்ட துறைகளில் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
3. கல்வி , தகவல் , தொடர்பு :
கல்லூரியில் படித்த துறையில் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
4. எம்ஐஎஸ் ஆய்வாளர் :
மூன்று ஆண்டுகள் MIS துறைகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
1. எம்ஐஎஸ் ஆய்வாளர் – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
1. திடக்கழிவு மேலாண்மை & சுகாதார நிபுணர் – ரூ.35,000 வரையில்
2. திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் – ரூ. 35,000 வரையில்
3. திட்டமிடல் , ஒருங்கிணைப்பு , கண்காணிப்பு – ரூ. 35,000 வரையில்
4. கல்வி , தகவல் , தொடர்பு – ரூ. 25,000 வரையில்
5. எம்ஐஎஸ் ஆய்வாளர் – ரூ. 25,000 வரையில் மாத மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
11.09.2023 முதல் 22.09.2023 வரையில் விண்ணப்பிக்க இருக்கும் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கீழே இருக்கும் லிங்க் பயன்படுத்தி இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய படிநிலைகள் :
1. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலே இருக்கும் லிங்யை கிளிக் செய்ய வேண்டும்.
2. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பணியிடங்களுக்கு ஏற்ப தனித்தனியே லிங்க் இருக்கும்.
3. அதில் பெயர் , தந்தை / கணவர் பெயர் , பிறந்த தேதி , வயது , மின்னஞ்சல் முகவரி , ஆதார் கார்டு நம்பர் , முகவரி , மொபைல் நம்பர் , அனைத்தும் சரியாக கொடுத்த பின் save கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர் சொந்த மாவட்டம் , புகைப்படம் , தெரிந்த மொழிகள் ( தமிழ் , ஆங்கிலம் , மற்றவை ) , கல்வி தகுதி விவரங்கள் , பணி அனுபவம் மற்றும் விவரங்கள் போன்றவைகளை நிரப்பிய பின் டிக் செய்ய வேண்டும்.
5. கடவுச்சொல் பதிவு செய்து விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
இணையதளத்தின் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.