தமிழகத்தில் கோவில்களுக்கு பெயர் பெற்றது என்றால் உயர்ந்த கோபுரங்கள் கொண்ட தஞ்சை பெரிய கோவில். அதற்கு அடுத்த படியாக தமிழகத்தில் கோவில்களுக்கு என்று சிறப்பு பெற்ற பகுதி ” கும்பகோணம் “. இந்த பகுதியில் பல சிவன் கோவில்கள் இருக்கின்றது. சிவன் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக உற்சவம் இப்பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படுறது. ஒவ்வொரு ரசிக்குக்கும் ஒரு கோவில் சிறப்பு பெற்றது. உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை காணலாம் வாங்க.
உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்
” கும்பகோணம் ” பெயர்க்காரணம் :
தற்போது சொல்லப்பட்டு வரும் கும்பகோணம் என்ற பெயர் பண்டைய காலங்களில் ” குடந்தை ” என்று அழைப்பட்டு இருந்துள்ளது. காரணம் குடந்தை என்பதற்கு ” வளைவு ” என்பது பொருள். காவேரி நதியானது இப்பகுதியில் வந்து வளைந்து செல்வதால் ” குடந்தை ” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் திருஞானசம்பந்தர் ” குடமூக்கு ” என்று அழைத்துள்ளார். சொல்லப்பட்டு இதுவே இன்று கும்பகோணம் என்று சொல்லப்படுகிறது.
கும்பகோணத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள் :
1. ராஜ ராஜ சோழன் நினைவு இடம்
2. கும்பகோணம் டவுன் ஹால் கும்பகோணத்தில் பல சிறப்புகள் வாய்ந்த கோவில்கள் நிறைந்து இருந்தாலும் இப்பகுதிகள் சுற்றுலா வரும் மக்கள் பார்க்க வேண்டிய இடங்களாக இருக்கின்றது.
தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !
ஆன்மிக சுற்றுலா தளங்கள் :
கோவில்களின் நகரம் என்று பெயர் பெற்றதால் பல கோவில்கள் கும்பகோணம் பகுதியை சுற்றிலும் இருக்கின்றது. அவைகளில் கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
1. மகாமகம் தொட்டி
2. காசி விஸ்வநாதர் கோவில்
3. ஸ்ரீ சார்ங்கபாணி சுவாமி கோவில்
4. அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோவில்
5. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்
6. சுவாமி மலை சுவாமிநாதமலை திருக்கோவில்
7. அருள்மிகு நாகேஸ்வரன் திருக்கோவில்
8. திருவலங்சுலி வெள்ளை பிள்ளையார் கோவில்
9. ஒப்பிளலியப்பன் கோவில்
10. அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
11. பிரம்மா கோவில்
12. ஆதி கும்பேஸ்வரர் கோவில்
13. சூரியனார் கோவில்
14. கஞ்சனுர் அக்னீஸ்வரர் கோவில்
15. யோக நந்திஸ்வரர் கோவில்
16. ஸ்ரீ சக்கரபாணி கோவில்
17. மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில்
18. பாணபுரீஸ்வரர் கோவில்
19. அபிமுககேஸ்வரர் கோவில்
20. கவுதமேஸ்வரர் கோவில் இது போன்ற பல சிறப்புகள் வாய்ந்த கோவில்கள் கும்பகோணம் பகுதியில் இருக்கின்றது.
12 ராசிக்காரர்களும் தரிசிக்க வேண்டிய கோவில் :
ஒவ்வரு ராசிக்காரர்களும் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்கள் என்று ஒன்று இருக்கின்றது. இதில் 12 ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய கோவில் கோவில் நகரமாகிய கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கின்றது.
1. மேஷம் – வரதராஜா பெருமாள் கோவில்
2. ரிஷபம் – ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி கோவில்
3. மிதுனம் – சக்கரபாணி கோவில்
4. கடகம் – மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில்
5. சிம்மம் – பாணபுரீஸ்வரர் கோவில்
6. கன்னி – காசி விஸ்வநாதர் கோவில்
7. துலாம் – அபிமுககேஸ்வரர் கோவில்
8. விருச்சகம் – கவுதமேஸ்வரர் கோவில்
9. தனுசு – நாகேஸ்வரர் கோவில்
10. மகரம் – சோமேஸ்வரர் கோவில்
11. கும்பம் – கும்பேஸ்வரர் கோவில்
12. மீனம் – பிரம்மன் கோவில்
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்
கோவில்களின் சிறப்புகள் :
1. சந்திர பகவானுக்கு நோய் ஏற்பட்ட அந்நோயில் இருந்து விடுபட கும்பகோணம் பகுதியில் இருக்கின்ற சோமலிங்கத்திருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ததன் மூலம் நோயில் இருந்து குணமாகி இருக்கின்றார்.
2. குபேரனுக்கு கும்பகோணம் திருத்தலங்களை வழிபாடு செய்த பின் தான் ” குபேரபுரி ” என்னும் நகரின் தலைவன் ஆகின்றார்.
3. கும்பகோணம் வந்து சிவனை வழிபடும் போது உலக உயிர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆக இருக்கின்றது.
4. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் கும்பகோணம் கோவில் நகரத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
5. கும்பகோணம் பகுதியில் இருக்கும் அனைத்து தலங்களுக்கும் வந்து வழிபாடு செய்யும் போது தேவர்கள் கூட பெறாத பெரும்பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கின்றது.
6. சோழ மன்னர்களின் கருவூலம் கும்பகோணம் பகுதியில் தான் இருந்துள்ளது.
7. மாசி மகம் தினத்தன்று விரதம் இருந்து வழிபடும் போது ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கின்றது.
8. மகாமகம் குளத்தில் பௌர்ணமி நாளில் நீராடும் போது ஏழு பிறவிகளிலும் நன்மை மட்டுமே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
9. உலகின் அனைத்து பகுதிகளையும் படைத்தவன் பிரம்மன் தான் ஆனால் கும்பகோணம் பகுதி சிவன் உருவாக்கியது என்று புராணங்கள் நமக்கு கூறுகின்றது.
10. கும்பகோணம் பகுதியில் சிவன் , விஸ்ணு , பிரம்மன் என மூவருக்கும் உரிய ஆலயங்கள் இருக்கின்றது.
எப்படி செல்ல வேண்டும் :
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலங்களில் கும்பகோணம் நகரம் ” தென்னிந்தியாவின் கேம்பிரிஜ் ” என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருந்தது. மதுரை , சென்னை , திருச்சி போன்ற அனைத்து பகுதிகளிலும் இருந்து கும்பகோணம் வந்து ஒவ்வரு பகுதிகளில் இருக்கும் கோவில்களை தரிசனம் செய்யலாம்.