தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் சார்பில் இயங்கி வரும் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்ற தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது. அதன்படி TNPSC சற்று முன் வந்த வேலைவாய்ப்பு 2023 இராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் மேலாளர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றது. TNPSCல் காலியாக இருக்கும் பணியின் வகை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கல்வி , வயது , அனுபவம் , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
TNPSC சற்று முன் வந்த வேலைவாய்ப்பு 2023
வாரியத்தின் பெயர் :
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக TNPSC சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant )
2. மேலாளர் கால்நடை ( Manager – Veterinary ) போன்ற பணியிடங்கள் TNPSCல் காலியாக உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. ஆராய்ச்சி உதவியாளர் – 14
2. மேலாளர் கால்நடை – 24 என மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. ஆராய்ச்சி உதவியாளர் :
பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நுண்ணுயிரியல் , நோயியல் , ஒட்டுண்ணியிரியல் , விலங்கு உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் M.V.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. மேலாளர் கால்நடை :
அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவத்தில் B.V.Sc & A.H பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023 ! 2,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
முக்கிய குறிப்பு :
காலியாக இருக்கும் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் ஆர்வமுடையவர்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவராக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
1. ஆராய்ச்சி உதவியாளர் – 32 வயதிற்குள்
2. மேலாளர் கால்நடை – 32 வயதிற்குள் இருக்கும் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி தளர்வு :
1. மாற்றுத்திறனாளிகள் – 42 வயதிற்குள்
2. முன்னாள் ராணுவத்தினர் – 50 வயதிற்குள் இருப்பவர்களும் மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
1. ஆராய்ச்சி உதவியாளர் – ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரையில்
2. மேலாளர் (கால்நடை) – ரூ. 55,500 முதல் ரூ. 1,75,700 வரையில் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
20.09.2023 முதல் 19.10.2023 வரையில் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேலே குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் – ரூ. 150
தேர்வு கட்டணம் – ரூ. 200
SC / ST / PWD / Window – கட்டணம் கிடையாது
தேர்வு மையங்கள் :
1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. மதுரை
தேர்ந்தெடுக்கும் முறை :
TNPSCல் காலியாக இருக்கும் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
1. விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.10.2023
2. விண்ணப்பம் திருத்தம் செய்ய வேண்டிய தேதி – 24.10.2023 முதல் 26.10.2023
3. சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் – 28.11.2023
4. கணினி வழி தேர்வு – பிப்ரவரி 2024
5. நேர்காணல் – மார்ச் 2024
6. கலந்தாய்வு – மார்ச் 2024