பழைய வாகனம் வாங்க போறீங்களா தற்போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லட்சத்திற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அனைவராலும் புதிய வாகனங்களை வாங்க முடியாத காரணத்தினால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பழைய வாகனங்களை நாம் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். இப்படியாக பல இடங்களில் விற்பனையாகும் பழைய வாகனம் வாங்க இருப்பவர்கள் சில முக்கிய சான்றிதழ்கள் எல்லாம் இருக்க என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும் குறைந்த விலையில் வாகனங்களை எப்படியெல்லாம் பேசி வாங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பழைய வாகனம் வாங்க போறீங்களா
சந்தை விலை அறிதல் :
நாம் குறைந்த விலையில் வாங்க இருக்கும் பழைய வாகனத்தின் சந்தை விலையை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். விலை அறிந்திருந்தால் மட்டும் தான் விலையை குறைத்து நாம் பேரம் பேசி வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். நாம் வாங்க இருக்கும் வாகனத்தின் விலையை வாகனத்தின் ” இன்சூரன்ஸ் ” சான்றிதழ் மூலம் அறிந்து கொள்ளலாம். இன்சூரன்ஸ் சான்றிதழில் இருக்கும் IDV என்னும் பிரிவில் ஒரு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த தொகையில் இருந்து தான் வாகனத்தின் விலையானது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும். இதன் மூலம் நாம் வாங்க இருக்கும் வாகனத்தின் சந்தை விலையை அறிந்து கொள்ள முடியும்.
விலையை எப்படி குறைக்கலாம் :
பழைய இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களை வாங்கும் போது சந்தை விலையில் இருந்து குறைத்து தான் வாங்க வேண்டும். அதற்க்கு நாம் சில வழிமுறைகளை அறிந்து கொள்ளவது அவசியம். அவையாவன ,
1. ஓனர் எண்ணிக்கை :
நாம் வாங்கும் வாகனத்திற்கு எத்தனை ஓனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு ஓனர் தான் என்றால் விலையை அதிகம் குறைத்து பேச முடியாது. நான்கு முதல் ஐந்து ஓனர் என்றால் விலையை குறைத்து பேசுவதற்கும் எளிதாக இருக்கும்.
2. கிலோமீட்டர் அறிதல் :
வாகனம் எத்தனை கிலோமீட்டர் ஓடி இருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் குறைந்த கிலோமீட்டர் தான் வாகனம் ஒடி இருக்கின்றது என்றால் விலையை குறைக்க முடியாது. அதிக கிலோமீட்டர் வாகனம் ஒடி இருக்கின்றது என்றால் தாராளமாக விலையை குறைத்து பேச முடியும்.
3. வாகனத்தின் வயது :
வாகனத்தின் வயது அறிந்திருத்தல் வேண்டும். ஏனென்றால் ஒரு வாகனம் 15 வருடங்கள் தான் இயக்க வேண்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே 10 வருடங்கள் இயக்க வாகனம் என்றால் விலையை குறைத்து பேசி நாம் வாங்க முடியும்.
4. பெயிண்ட் தரம் :
நாம் பழைய விலையில் கார் வாங்க இருக்கின்றோம் என்றால் ஒரிஜினல் பெயிண்ட் அடித்த வாகனமா அல்லது ரீபெயிண்ட் அடித்த வாகனமா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒரிஜினல் பெயிண்ட் என்றால் அதற்க்கு ஒரு விலை இருக்கின்றது. ரீபெயிண்ட் அடித்த வாகனம் என்றால் அதற்கும் ஒரு விற்பனை விலை உள்ளது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
இன்ஜின் பரிசோதனை :
ஒரு மனிதன் உயிர் வாழ வேண்டும் என்றால் இதயம் மிகவும் அவசியம். அதே போல் அனைத்து வாகனங்களுக்கும் இதய பகுதியாக இருப்பது இன்ஜின் பகுதி தான். நாம் பழைய வாகனங்களை வாங்க இருக்கின்றோம். எனவே இன்ஜின் பரிசோதனை மிகவும் அவசியமாக இருக்கின்றது. நமக்கு வாகனத்தினை இயக்கி இன்ஜின் பரிசோதனை செய்ய தெரியும் என்றால் நாமே பரிசோதனை செய்து கொள்ளலாம். அல்லது நமக்கு தெரிந்த நம்பிக்கைக்குரிய மெக்கானிக்கை அழைத்து நன்றாக இன்ஜினை பரிசோதனை செய்த பின்னரே வாகனம் வாங்க வேண்டும்.
ஆவணங்கள் முக்கியம் :
பழைய வாகனம் வாங்கும் போது வாகனத்திடம் ஓனரிடம் இருந்து முக்கிய ஆவணங்களை மறக்காமல் வாங்க வேண்டும். அவையாவன ,
1. ஆர்சி புக் ஒரிஜினல்
2. வாகனத்தின் தற்போதைய இன்சூரன்ஸ் சான்றிதழ்
3. RTO அலுவலகத்திடம் இருந்து படிவம் 29 , 30 வாங்கி பழைய ஓனர் நிரப்ப வேண்டிய அனைத்து விவரங்களையும் நிரப்பி கையொப்பம் வாங்க வேண்டும். இந்த படிவமானது RTO அலுவலகத்தின் அருகில் இருக்கும் ஜெராக்ஸ் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.
பூர்விக சொத்து வாங்க போறீங்களா ! இதையும் தெரிஞ்சுகோங்க !
4. வாகனத்தினை விற்பனை செய்பவரிடம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கிக்கொள்ள வேண்டும்.
5. RC புக்கில் இருக்கும் ரேஸ் நம்பர் , இன்ஜின் நம்பர் மற்றும் வாகனத்தின் ரேஸ் நம்பர் , இன்ஜின் நம்பர் சரியாக ஒத்துப்போகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
6. வாகனத்தின் மீது காவல்துறையினரின் சார்பில் வழக்கு ஏதும் போடப்பட்டு இருக்கின்றதா என்பதையும் அபராதம் ஏதும் நிலுவையில் இருக்கின்றதா என்பதை ஆன்லைன் மூலம் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெயர் மற்றம் :
ஆவணங்கள் எல்லாம் சரி பார்த்த பின் பணம் செலுத்தி வாகனங்களை வாங்கிய பின் வாகனத்தின் பெயர் மாற்றி கொள்ள வேண்டும்.
பழைய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை நாம் வாங்கும் போது விலையை குறைத்து பேசி வாங்குவது வழக்கம் தான். அப்போது பழைய வாகனம் வாங்கும் போது ஆவணங்கள் சரிபார்த்து வாங்குவது அவசியம். மேற்கண்ட வழிமுறைகள் பின்பற்றி வாங்கும் போது நாம் ஏமாறாமல் வாகனம் வாங்க முடியும்.