பிரதமர் அருகில் இருக்கும் SPG கையில் இருக்கும் Bag ரகசியம் தற்போதைய பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. இவர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வருவது வழக்கம் தான். அதிகாரிகள் அனைவர் கையிலும் கருப்பு நிற Bag வைத்திருப்பார்கள். அந்த Bagல் என்ன இருக்கின்றது எதற்கு பயன்படுகின்றது என்பது குறித்த பல கேள்விகள் இருக்கும். அதனை குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
SPG கையில் இருக்கும் Bag ரகசியம்
பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு :
பிரதமர் எங்கு சென்றாலும் அவருக்கு பல்வேறு வகையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும். ஏதேனும் இடங்களுக்கு செல்கின்றார் எனில் மூன்று வகையான எஸ்காட் வாகனங்கள் பாதுகாப்பிற்கு வரும். இவர் பயணிக்கும் இடத்தில் வானத்தில் ஹெலிகாப்டர் மூலம் சோதனை செய்யப்படும். இவர் பயன்படுத்தும் கார் புல்லட் துளைக்க முடித்ததாக இருக்கும். இவர் செல்லும் இடத்தில் தொழில்நுட்பம் எல்லாம் சரியாக இருக்கின்றதா என்பதை சோதனை செய்வதற்கு என்று ஒரு வாகனம். இது போன்ற பல பாதுகாப்புடன் பிரதமர் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு குழு :
பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு குழுவில் இருப்பவர்கள் பிரதமர் அருகில் கருப்பு உடை அணிந்து இருப்பர். கொஞ்சம் தூரத்தில் இருந்து பாதுகாப்பு அளிப்பர். இல்லையென்றால் மக்களுடன் மக்களாக கலந்து கருப்பு உடை அணியாமலும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவர். நாட்டின் முதலமைச்சர் மற்றும் கவர்னர் என யார் பிரதமரை சந்திக்க இருந்தாலும் பல வகையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பிரதமரை சந்திக்க வரும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பிரதமர் அருகில் கூட வராத அளவில் பல கிலோமீட்டர் தூரம் தாண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். பாதுகாப்பு குழு வீரர் அனைவர் கைகளிலும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கிகள் வைத்திருப்பார்கள்.
பழைய வாகனம் வாங்க போறீங்களா ! இதுவும் முக்கியம் !
Bag ரகசியம் :
பாதுகாப்பு வழங்கும் வீரர்கள் கருப்பு உடை அணிந்து சிலரின் கையில் கருப்பு நிற Bag வைத்து இருப்பர். ஏன் அந்த Bag அனைவர் கைகளிலும் இருக்கின்றது என்ற கேள்வி எழலாம். பிரதமர் பயணிக்கும் இடங்களில் ஏதேனும் தாக்குதல்கள் திடீரென்று நடைபெறுகின்றது எனில் கையில் இருக்கும் Bag பாதுகாப்பு வளையம் போல் மாற்றி விடுவார். இவ்வளையத்தின் வழியே பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல்களை நடத்துவார்கள். வீரர்கள் கைகளில் இருக்கும் Bag கூட பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் படியே அமைந்துள்ளது.
Bag செயல்படும் விதம் :
மடிக்கணினி போல் இருக்கும் Bag உள்ளே துப்பாக்கி இருக்கும். இந்த Bag ஆனாது பாதுகாப்பு புல்லட் துளைக்காத வெஸ்ட் ( Bullet Proof Vest ). ஏதேனும் ஒரு தாக்குதல் நடக்கும் போது Bag திறந்து பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் வளையம் போல் ஆகின்றது. அதனை பயன்படுத்து வீரர்கள் எதிர்த்தாக்குதல் செய்வர். அருகில் இருக்கும் வீரர்கள் அனைவரும் சேர்ந்து குண்டு துளைக்காத வெஸ்ட் பயன்படுத்தி அணைத்துக்கொண்டு பிரதமரை பாதுகாப்புடன் கூட்டிக்கொண்டு சென்று விடுவார்.
காரின் சிறப்புகள் :
பிரதமர் Benz Maybach , RANGE ROVER போன்ற பல கார்களை பயன்படுத்துகின்றார். இந்த கார் பல சிறப்புகளை கொண்டது. இந்த காரில் பயணிக்கும் போது எந்த ஒரு துப்பாக்கி தாக்குதல்கள் நடந்தாலும் புல்லட்டுகள் காரில் துளையிட முடியாது. இது போன்ற பல கார்களை பிரதமர் பயன்படுத்தி வருகின்றார். இவர் இன்று இந்த கரை தான் பயன்படுத்த போகின்றார் என்று முன்னரே யாருக்கும் தெரியாது. ஏனென்றால் தீவிரவாதிகள் யாரும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்க்காக தான். பிரதமர் பயன்படுத்தும் கார் மட்டும் தனியே பயணிப்பதும் உண்டு. நாம் என்ன செய்தலும் கார் டயர் பல கிலோமீட்டர் தூரம் வரையில் ஓடும். காரின் உள்ளே ஆக்சிஜன் இருக்கும்.
எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்
பாக்ஸ் வடிவ கார் :
பிரதமர் பயணிக்கும் சாலையில் செல்லும் பாதுகாப்பு குழுவின் வாகனங்கள் முன் பக்கம் பின் பக்கம் என சூழ்ந்து பாக்ஸ் வடிவில் பாதுகாப்பு அளிக்கின்றனர் பாதுகாப்பு குழுவினர். கண்ணாடி அணிந்து , கோட் அணிந்து இருப்பவர்கள் 18 புல்லட்டுகள் கொண்ட துப்பாக்கி வைத்து இருப்பார்கள். மேலும் இவர்களிடம் 100 புல்லட்டுகளை வைத்துக்கொள்ளும் திறன் பெற்றுள்ளனர்.
ட்ரோன்ஸ் பறக்க தடை :
பிரதமர் ஒரு இடத்திற்கு செல்கின்றார் எனில் ஹெலிஹாப்டர் மூலம் வானத்தில் பாதுகாப்பு குழுவினரால் தீவிர சோதனை செய்யப்படுகின்றது. அங்கு விமானம் , ட்ரோன்ஸ் போன்றவைகள் பறப்பதற்கு தடை செய்யப்படும்.