இறைவன் திரை விமர்சனம். நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் இறைவன் படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இறைவன் திரைப்படம் எப்படி இருக்கு என்ற முழு விமர்சனம் காணலாம்.
இறைவன் திரை விமர்சனம் ! எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ !
படக்குழு :
இறைவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ளார். கதாநாயகியாக திரைப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கின்றார். வில்லன் கதாப்பாத்திரமாக ராகுல்போஸ் நடித்து இருக்கின்றார். ‘ மனிதன் ‘ திரைப்படத்தினை இயக்கிய ஐ.அகமது இறைவன் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
இசை :
படத்திற்கு இசை என்பது முக்கியம். அதன்படி திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 1 மணி நேரம் 54 நிமிடங்கள் இருக்கும் இந்த திரைப்படத்தினை ‘ பேஷன் ஸ்டுடியோஸ் ‘ நிறுவனம் தயாரித்து உள்ளது. திரைப்படத்தில் நரேன் , சார்லி , விஜயலட்சுமி போன்ற திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
ஒரு வரியில் கதை :
ஒரு பகுதியில் பெண்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றார்கள். பெண்களை கொல்லுவதுயார் , கொலையாளி ஏன் இவ்வாறு வரிசையாக கொல்கின்றான் என்பதை கண்டறிவது தான் இறைவன் திரைப்படம். உளவியல் சார்ந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக இருக்கின்றது.
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது !
கதை விமர்சனம் :
சென்னை பகுதியில் இருக்கும் பெண்கள் smiley killer(ராகுல்போஸ்) என்பவரால் கொல்லப்படுகின்றார்கள். அதாவது கண்கள் நோண்டப்பட்டு பெண்கள் இறக்கின்றார்கள். யார் கொலை செய்கின்றார்கள் என்பதை கண்டறிய காவல் துறையின் சார்பில் நரேன் நியமிக்கப்படுகின்றார். கொலை செய்பவர் யார் என்பதை நரேனால் கண்டறிய முடியவில்லை. இவருக்கு உதவிட காவல்துறை அதிகாரியாக ஜெயம்ரவி வருகின்றார்.
கொலை செய்ய காரணம் :
ஜெயம்ரவி தான் எடுத்த பணியில் உறுதியாக இருப்பவர். இதனால் கொலை ஏன் நடக்கின்றது. கொலை செய்பவர் யார் என்பதை நிதானமாக கண்டு பிடிக்கின்றார். இறுதியில் பெண்களை கொலை செய்த ராகுல்போஸ் காவல்துறையில் சிக்கிக்கொள்கின்றார். இவர் பெண்களை கொலை செய்வதற்கான காரணம் என்ன. இவருக்கு காவல்துறையின் சார்பில் வழங்கப்படும் தீர்ப்பு என்ன என்பதே இறைவன் திரைப்படத்தின் இறுதி கதையாக இருக்கின்றது.
படத்தின் நிறைகள் :
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் மக்கள் எதிர்பார்ப்பை ஜெயம்ரவி நிறைவு செய்துள்ளார். நயன்தாராவுக்கும் ஜெயம்ரவிக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பானதாக அமைந்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்தவர் ராகுல்போஸ். கதைக்களத்திற்கு ஏற்றாப்போல் நடிப்பதில் சிறந்தவர். அதே போல் இந்த திரைப்படத்திலும் ராகுல்போஸ் தனது சிறப்பான நடிப்பை சைக்கோ வேடத்தில் காட்டியுள்ளார்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
படத்தின் குறைகள் :
திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதி வரையில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கின்றது. ஆனால் கதைக்கு ஏற்றாப்போல் இசை , பாடல் இல்லை என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. ராட்ஷசன் , போர்த்தொழில் போன்ற திரைப்படத்தில் வரும் BGM போன்று இறைவன் BGM அமையவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இறைவன் OTTயில் எப்போது :
இறைவன் திரைப்படம் OTT தளங்களில் வெளியிடும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருக்கின்றது. OTTயில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் OTTயில் வெளியிடுவதற்கான அறிவிப்பானது இன்னும் அறிவிக்கவில்லை.
A சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு :
ஒரு மொழியில் திரைப்படம் வெளியாகின்றது என்றால் சென்சார் போர்டு சார்பில் சான்றிதழ் வாங்கிய பின்பு தான் திரையரங்கில் அல்லது OTTயில் வெளியாகும். அதன் வரிசையில் இறைவன் திரைப்படத்திற்கு ‘A ‘ சான்றிதழ் வழங்கி உள்ளது. திரைப்படத்தில் சில வன்முறை காட்சிகள் பல இடம்பெற்று இருப்பதால் சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கி உள்ளது.
தனிஒருவன் திரைப்படத்திற்கு பின் ஜெயம்ரவி , நயன்தாரா நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியாகி உள்ளது. தியேட்டர் சென்று பார்ப்பதர்க்கு சரியான திரைப்படம். மேலும் , திரில்லர் பட ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும்.