தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு தேசிய வீட்டு வசதி வங்கி டெல்லியை தலைமை இடமாகக்கொண்டு 1988ம் ஆண்டு முதல் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இந்த வங்கியில் மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம். national housing bank recruitment september 2023
தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு ! ரூ. 36,000 சம்பளத்தில் !
நிறுவனத்தின் பெயர் :
National Housing Bank – NHB தேசிய வீட்டு வசதி வங்கியில் காலிப்பணியிடம் இருக்கின்றது என்று வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. Chief Economist – தலைமை பொருளாதார நிபுணர்
2. General Manager – பொது மேலாளர்
3. Deputy General Manager – துணை பொது மேலாளர்
4. Assistant General Manager – உதவி பொது மேலாளர்
5. Deputy Manager ( Economist ) – துணை மேலாளர் ( பொருளாதார நிபுணர் )
6. Assistant Manager ( Generalist ) – உதவி மேலாளர் ( பொதுவியலாளர் )
7. Senior Application Developer – மூத்த பயன்பாட்டு டெவலப்பர்
8. Application Developer – பயன்பாட்டு டெவலப்பர்
9. Senior Project Finance Officer – மூத்த திட்ட நிதி அதிகாரி
10. Project Finance Officer – திட்ட நிதி அதிகாரி போன்ற பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்னிக்கை :
1. தலைமை பொருளாதார நிபுணர் – 1
2. பொது மேலாளர் – 1
3. துணை பொது மேலாளர் – 1
4. உதவி பொது மேலாளர் – 1
5. துணை மேலாளர் – 4
6. உதவி மேலாளர் – 17
7. மூத்த பயன்பாட்டு டெவலப்பர் – 1
8. பயன்பாட்டு டெவலப்பர் – 2
9. மூத்த திட்ட நிதி அதிகாரி – 7
10. திட்ட நிதி அதிகாரி – 8 என மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. தலைமை பொருளாதார நிபுணர் :
வங்கி மற்றும் நிதி சம்மந்தப்பட்ட துறைகளில் PhD முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. பொது மேலாளர் :
ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பட்டயக்கணக்காளர் CA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. துணை பொது மேலாளர் :
PRM / FRM / CFA போன்ற சான்றிதழ் கல்வி உடன் CA பட்டயக்கணக்காளர் முடித்திருக்க வேண்டும்.
4. உதவி பொது மேலாளர் :
பொருளாதாரம் துறையில் M.Phil , PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. துணை மேலாளர் :
பொருளாதாரம் துறையில் முதுகலைப்பட்டம் , M.Phil , PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
6. உதவி மேலாளர் :
ஆபரேசன் ரிசர்ச் துறையில் டிப்ளமோ அல்லது புள்ளியில் துறையில் முதுகலை பட்டம் , M.Phil , PhD பிடித்தவர்கள் விண்ணப்பித்துக்கொள்ள முடியும்.
7. மூத்த பயன்பாட்டு டெவலப்பர் :
கணினி அல்லது தொழில்நுட்பத்துறையில் B.Sc , M.Sc , B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8. பயன்பாட்டு டெவலப்பர் :
கணினி அல்லது தொழில்நுட்பத்துறையில் B.Sc , M.Sc , B.Tech முடித்தவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் !
வயதுத்தகுதி :
1. 1. தலைமை பொருளாதார நிபுணர் – 62 வயதிற்குள்
2. பொது மேலாளர் – 40 – 55 வயதிற்குள்
3. துணை பொது மேலாளர் – 40 – 55 வயதிற்குள்
4. உதவி பொது மேலாளர் – 32 – 50 வயதிற்குள்
5. துணை மேலாளர் – 23 – 32 வயதிற்குள்
6. உதவி மேலாளர் – 25 – 35 வயதிற்குள்
7. மூத்த பயன்பாட்டு டெவலப்பர் – 23 – 32 வயதிற்குள்
8. பயன்பாட்டு டெவலப்பர் – 21 – 30 வயதிற்குள்
9. மூத்த திட்ட நிதி அதிகாரி – 40 – 59 வயதிற்குள்
10. திட்ட நிதி அதிகாரி – 35 – 59 வயதிற்குள் இருப்பவர்கள் NHBல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அனுபவம் :
1. தலைமை பொருளாதார நிபுணர் – 15 ஆண்டுகள்
2. பொது மேலாளர் – 12 முதல் 15 ஆண்டுகள்
3. துணை பொது மேலாளர் – 12 ஆண்டுகள்
4. உதவி பொது மேலாளர் – 10 ஆண்டுகள்
5. துணை மேலாளர் – 2 ஆண்டுகள்
6. உதவி மேலாளர் – 2 ஆண்டுகள்
7. மூத்த பயன்பாட்டு டெவலப்பர் – கல்வி சார்ந்த அனுபவம்
8. பயன்பாட்டு டெவலப்பர் – கல்வி சார்ந்த அனுபவம்
9. மூத்த திட்ட நிதி அதிகாரி – 4 ஆண்டுகள்
10. திட்ட நிதி அதிகாரி – 4 ஆண்டுகள் வரையில் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
JOIN SKSPREAD WHATSAPP | CLICK HERE |
சம்பளம் :
தேசிய வீட்டு வசதி வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு என தேர்ந்ததெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ. 36,000 முதல் ரூ. 5,00,000 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
28.09.2023 முதல் 18.10.2023 வரையில் NHBயில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் தேசிய வீட்டு வசதி வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. SC / ST / PwBD பிரிவினர்கள் – ரூ. 175
2. பொதுப்பிரிவினர்கள் – ரூ. 850 விண்ணப்பக்கட்டணமாக செலுத்தி NHB காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு முறைகள் :
1. இணைய வழி கணினித் தேர்வு
2. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.