ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது.
ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !
தண்ணீர் இல்லாததற்கு காரணம் மழை பெய்யாததால் தான் என்று கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டது.
JOIN WHATSAPP CHANNEL | CLICK HERE |
பூமியில் நீர் ஊற்று இல்லாததால் அனைத்து கிணறுகளும் வற்றின. குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு வந்தது. கோவிலின் உள்ளே உள்ள தீர்த்த கிணறுகளும் வற்றின. இதனால் தண்ணீர் இறைத்து ஊற்றும் ஆர்வலர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பக்தர்களும் சிரமப்படுகின்றனர்.
இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டும். அப்படி பெய்தால் கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் நிரம்பும். மழையால் அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் ஊரும். ராமேஸ்வரத்தின் சிறப்பே தீர்த்த கிணறுதான். அதில் தண்ணீர் வற்றியதால் ராமேஸ்வரம் மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து !
இந்த வருடம் அதிக மழை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். நாம் எவ்வளவு வருத்தப்பட்டாலும் மழை பெய்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.