வட இந்தியாவில் நிலநடுக்கம் நேபாள் பகுதியில் சிறிது நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் அதிர்ச்சி டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் உணரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி நிர்மான் பவனில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் வெளியேறி இருக்கின்றார்.
வட இந்தியாவில் நிலநடுக்கம் ! அலுவலகத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர் !
நேபாளத்தில் நில நடுக்கம் :
நேபாளம் பகுதியில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 4.6 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து 2.51 மணிக்கு இதே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் பதிவாகி இருக்கின்றது. இந்த நிலநடுக்கம் தரைக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்து ஏற்பட்டுள்ளது என்று ஆய்வுகள் வெளியாகி உள்ளது.
நேபாளம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் மக்கள் வீடுகள் , அலுவலகங்கள் போன்ற கட்டிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர்.
JOIN WHATSAPP GROUP | CLICK HERE |
டெல்லியில் நில அதிர்வு :
நேபாளம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் இன்று மதியம் 2.25 மணியளவில் உணரப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமல்லாது வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் உணரப்பட்டு இருக்கின்றது. ராஜஸ்தான் , உத்தரகண்ட் , வடக்கு உத்திரபிரதேசம் மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கட்டிடங்களில் இருந்து சத்தமிட்டுக்கொண்டே வெளியே வந்துள்ளனர்.
மூன்று நாடுகளில் நிலநடுக்கம் :
நேபாளம் பட்டேகோடா மையப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை இந்தியா , சீனா மற்றும் நேபாளம் போன்ற மூன்று நாடுகளில் நில அதிர்வை ஏற்படுத்தியது.
சுகாதாரத்துறை அமைச்சர் வெளியேற்றம் :
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லி நிர்மான் பவனியில் இருந்துள்ளார். நில அதிர்வு இந்த பகுதியில் உணரப்பட்டு உள்ளது. இதனால் அமைச்சர் மற்றும் பணியாளர் உட்பட பல நபர்கள் அலுவகத்தில் இருந்து வெளிய வந்து விட்டனர்.
ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !
நேபாளம் பகுதியில் 25 நிமிடங்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். பாதுகாப்பு கருதி வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.