கர்நாடகாவில் கனமழை. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. ஆனால் காவேரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை குறைத்துள்ளது.
கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு !
காவேரி மேலாண்மை வாரியம் தீர்ப்பு :
நீர் பிரச்சனை தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாய் நிகழ்ந்து வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய நீரினை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று காவேரி மேலாண்மை வாரியம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரையில் தினமும் 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றும் வாரியம் உத்தரவு அளித்திருந்தது.
JOIN WHATSAPP GROUP | CLICK HERE |
காவேரி பிரச்சனை :
சரியான மழை இல்லாததால் காவேரி நீர் கர்நாடகா மக்களுக்கே போதுமானதாக இல்லை. இதுபோன்ற பல காரணங்களை முன்வைத்து 170க்கும் மேற்பட்ட அமைப்பினர் கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். கர்நாடக அமைப்பினர் காவேரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு :
கடந்த இரண்டு தினங்களாக காவேரி நீர்ப்பிடிப்பு இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடகாவின் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடக்கி விட்டது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் நேற்று 5,000 கனஅடி நீர் இருந்துள்ளது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் 11,500 கனஅடி நீர் உயர்ந்துள்ளது. இதோ போல் கபினி அணைக்கு வரும் நிர்வரத்தும் அதிகரித்து உள்ளது.
நீர் வெளியேற்றம் குறைப்பு :
கர்நாடகா அணைகளில் இருந்து காவேரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று வரையில் 3,179 கனஅடியாக இருந்தது. தற்போது கபினி அணையில் இருந்து 1,592 கனஅடி நீரும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,000 கனஅடி நீரும் திறந்துள்ளது. இரண்டு அணைகளிலும் நீர்வரத்து அதிகமாக இருந்தும் தற்போது இவைகள் குறைக்கப்பட்டு 2,592 கனஅடியாக இருக்கின்றது.
tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே !
அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக கூறி வந்தது. இந்நிலையில் மழையின் அதிகரித்து வருவதால் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டு உள்ளது. மழையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அணைக்கு நீர் வரத்தும் அதிகரிக்கும். இதனால் காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி கர்நாடக அரசு நீர் திறந்து விட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.