வந்தே பாரத் sleeper coach அறிமுகம் இந்தியாவில் அதி விரைவு வந்தே பாரத் ரயில் போக்குவரத்து முக்கிய நகரங்களில் மட்டும் இயங்கி வருகின்றது. 2024ம் ஆண்டு முதல் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.
வந்தே பாரத் sleeper coach அறிமுகம் ! புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் !
வந்தே பாரத் :
இந்தியாவில் மக்கள் போக்குவரத்திற்கு என்று அதிக வேகத்துடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு டெல்லி முதல் வாரணாசி வரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை முதல் பெங்களூர் வரையில் முதலில் இயக்கப்பட்டது. தற்போது திருநெல்வேலி முதல் சென்னை வரையில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகின்றது.
JOIN WHATSAPP | CLICK HERE |
வந்தே பாரத் ரயில் வேகம் :
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் சென்னையை அடைகின்றது. விருதுநகர் , மதுரை , திண்டுக்கல் , திருச்சி , விழுப்புரம் , தாம்பரம் இறுதியில் எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு மட்டும் நின்று செல்கின்றது. அதிவிரைவு ரயிலாக இயங்கி வரும் வந்தே பாரத் 83.30 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கி வருகின்றது. ஏசி நாற்காலி கட்டணம் ரூ. 1,665. எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கட்டணம் ரூ. 3,055 என்று வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இருக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் :
தற்போது இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் இருக்கும். அனைத்து பெட்டிகளும் ஏசி பெட்டிகள் தான். இவைகளில் 850 பேர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் கனமழை ! காவேரியில் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு !
ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் அறிமுகம் :
இந்தியாவில் தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன் வரிசையில் வந்தே பாரத் ரயில் பயணிகளின் வசதிக்காக ஸ்லீப்பர் வசதிகள் கொண்ட ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் இயங்க இருக்கின்றது. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இணையத்தில் வெளியீட்டு உள்ளார்.
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சிறப்புகள் :
1. 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயங்கும்.
2. 16 ரயில் பெட்டிகளை உள்ளடக்கியது.
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தொலைதூர பயணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த முயற்சியாக குறைந்த தூர பயணத்திற்க்காக மெட்ரோ வந்தே பாரத் ரயில் தயார் செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.