இறுகப்பற்று படம் திரை விமர்சனம் ! புதிதாக திருமணமானவர்கள் கட்டாயம் பார்க்கனும்  !இறுகப்பற்று படம் திரை விமர்சனம் ! புதிதாக திருமணமானவர்கள் கட்டாயம் பார்க்கனும்  !

   இறுகப்பற்று படம் திரை விமர்சனம். இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் இறுகப்பற்று . படத்தினை இயக்கியவர் யார் , படத்தின் கதை என்ன , குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்க முடியுமா போன்றவைகளை காணலாம் வாங்க.

இறுகப்பற்று படம் திரை விமர்சனம் ! புதிதாக திருமணமானவர்கள் கட்டாயம் பார்க்கனும்  !

இறுகப்பற்று படம் திரை விமர்சனம்

இறுகப்பற்று படக்குழு :

   தெனாலிராமன் மற்றும் எலி போன்ற திரைப்படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் தான் இறுகப்பற்று திரைப்படத்தினை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு , ஸ்ரீ , விதார்த் , ஷ்ரத்தா ஸ்ரீநாத் , அபர்நதி , சானியா ஐயப்பன் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP திரைப்படத்தினை தயரிப்பு செய்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் என்பவர் திரைப்பத்திற்கு இசை அமைத்து இருக்கின்றார். 2 மணி நேரம் 30 நிமிடம் திரைப்படம் திரையில் ஒளிபரப்பாகும்.

JOIN WHATSAPPCLICK HERE

பட ஜோடி :

   1. விதார்த் – அபர்நதி

   2. ஸ்ரீ – சானியா ஐயப்பன் 

   3. விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த மூன்று தம்பதியினரை வைத்து தான் கதை நகர்கின்றது.

ஒரு வரியில் கதை :

   மூன்று இளம் தம்பதிகள் மூன்று பகுதிகளில் இருக்கின்றனர். அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகின்றது. பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன. இறுதியில் தீர்வு கிடைக்கின்றதா என்பதே திரைப்படத்தின் ஒரு வரி கதையாக இருக்கின்றது.    

 கதை விளக்கம் :

   திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உளவியல் சார்ந்த கல்வி முடித்து மருத்துவமனையில் உளவியல் ஆலோசகராக இருக்கின்றார். பல கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு ஆலோசனை அளித்து வருகின்றார். இதே போல் பிரச்சனை தனக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஏற்பட்ட கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றார். 

   விதார்த் , அபர்நதி இருவரும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். விதார்த் தன் மனைவி மீதி எப்போதும் கோபத்துடன் இருக்கின்றார். ஆனால் மனைவி கணவன் மீதும் குடும்பத்தின் மீதும் அன்பாக எதார்த்தமாக இருப்பவர். மனைவி எது செய்தலும் இறுதியில் சண்டை ஏற்படுகின்றது. இவரை எப்படியாவது விவாகரத்து செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் விதார்த் இருக்கின்றார். 

தி ரோடு கதை இது தான் ! வெளியான தகவல் இதோ !

   ஸ்ரீ மற்றும் சானியா காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பின் காதல் குறைந்து கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றது. எனவே ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் பிரிந்தே இருக்கின்றனர். 

   இந்த மூன்று ஜோடிகளுக்குள் ஒரு பிரச்சனை இருக்கின்றது. அவர்களின் பிரச்சனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டு எவ்வாறு சரியாகின்றது என்பதே இறுதி கதையாக இருக்கின்றது.    

படத்தின் நிறைகள் :

   1. படத்தின் காட்சிகள் அன்றாட குடும்ப வாழ்க்கையோடு ஒத்துப் போகின்றது.

   2. உளவியல் ஆலோசகர் வழங்கும் ஆலோசனைகள் நம்மையும் சிந்திக்கும் படி செய்கின்றது. 

   3. கணவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை மனைவியும் , மனைவியிடம் இருக்கும் பிரச்சனைகளை கணவன் உணர்ந்து கொள்ளலும் வகையில் திரைப்படம் இருக்கின்றது.

   4. முதல் பாதி மூன்று ஜோடிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் கதை நகர்கின்றது. இரண்டாம் பாதி தீர்வு என்று எளிமையாக கதை நகர்கின்றது.

   5. கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாப்போல் நடிகர்கள் தேர்வு அமைந்து இருக்கின்றது.

   6. திரைப்படத்தில் வரும் வசனங்கள் நம்மை சிந்திக்கும் வகையில் இருக்கும்.

இத்திரைப்படம் திருமணமாணவர்கள் தங்களின் வாழ்க்கையை திருப்பி பார்க்கும் படியாக இருக்கும். காதலர்கள் மற்றும் அனைத்து வயது திருமணம் ஆனவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக இறுகப்பற்று திரைப்படம் இருக்கின்றது. விவாகரத்து செய்ய இருப்பவர்கள் இத்திரைப்படம் பார்த்தால் விவாகரத்து செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர்த்தும்.  தியேட்டர் சென்று பார்க்கும் போது இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும் என்பது படக்குழுவின் கருத்து.   

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *