7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும். இந்து மதத்தில் முறையான சடங்குகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்கள் செல்லாது. மேலும் ஏழு முறை அக்கினியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் முழுமையடையும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !
திருமண சட்டம் :
ஒரு ஆணுக்கு 21 வயதில் திருமணம் செய்யலாம். அதே போல் பெண்ணுக்கு 18 வயதில் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதித்து உள்ளது. ஆண் அல்லது பெண் இதற்க்கு குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும். அதையும் மீறி திருமணம் செய்தால் அவர்கள் மேலும் திருமணம் செய்து வைப்பவர்கள் மேலும் வழக்கு பதிவு செய்யப்படும்.
JOIN WHATSAPP | CLICK HERE |
இந்து திருமண சடங்கு :
அனைத்து மதங்களிலும் பாரம்பரிய முறைகளின் படி திருமணம் செய்து வைக்கப்படுகின்றது. ஆனால் இந்து மாதங்களில் திருமணம் செய்ய பல்வேறு நல்ல நேரங்கள் மற்றும் சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றது. திருமணங்கள் கோவில்களிலும் மண்டபங்களிலும் வைத்து நடத்தப்படுகின்றது.
பெரும்பாலும் சடங்குகளான பூ வைத்தல் , நிச்சயதார்த்தம் , திருமணம் என்று நடைபெறும். அதில் திருமணத்தின் போது அருந்ததி பார்த்தல் , மந்திரங்கள் கூறுதல் , தாலி கட்டுதல் , அக்னி வலம் வருதல் , அம்மி மேல் வைத்து மெட்டி போடுதல் என பல சடங்கு முறைகள் இருக்கின்றது.
ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை !
முழுமையான திருமண சடங்கு :
கோவில்கள் , திருமண மண்டபங்கள் அல்லது வீடுகளில் வைத்து திருமணங்கள் தற்போது நடத்தப்படுகின்றது. இவைகளில் திருமண நிகழ்வுகள் சாமி திரு உருவம் முன் வைத்து தாலி மந்திரித்து இந்து சமயங்களில் திருமணம் நடத்தப்படுகின்றது. இல்லையென்றால் அர்ச்சகர்கள் அக்னி வளர்த்து மந்திரங்கள் கூறி தாலி கட்டிய பின் அக்னியை வலம் வந்த பின் திருமணம் முழுமையடைகின்றது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு :
முறையான சடங்குகள் பின்பற்றப்பட்டு இந்து மத திருமணங்கள் செய்யவில்லை என்றால் அந்த திருமணங்கள் செல்லாது. தாலி கட்டிய உடன் அக்னியை ஏழு முறை வலம் வந்தால் மட்டுமே இந்து சமய திருமணங்கள் முழுமையடையும். இவ்வாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வீடுகள் , கோவில்கள் அல்லது மண்டபங்களில் வைத்து திருமணம் செய்தாலும் இந்து சமயத்தின் பாரம்பரிய முறைகள் பின்பற்ற வேண்டும். பின்னர் திருமணத்தினை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.