தொடங்கியது உலகக்கோப்பை 2023. பத்து கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகின்றது. இத்தொடரில் வெற்றி பெரும் அணிக்கு கோடி கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்றது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் !
10 அணிகள் :
1. இந்தியா
2. ஆப்கானிஸ்தான்
3. ஆஸ்திரேலியா
4. இங்கிலாந்து
5. நியூசிலாந்து
6. வங்க தேசம்
7. பாகிஸ்தான்
8. தென் ஆப்பிரிக்கா
9. இலங்கை
10. நெதர்லாந்து போன்ற பத்து அணிகள் 13வது உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ளனர்.
JOIN WHATSAPP | CLICKHERE |
உலகக்கோப்பை 2023 முதல் போட்டி :
13 வது உலகக்கோப்பை 50 ஓவர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது. மேலும் 10 அணிகளுக்கு இடையில் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கும் முக்கிய மைதானங்களில் நடக்க இருக்கின்றது. போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோத இருக்கின்றனர்.
இதற்க்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு முறை இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் நியூசிலாந்து இரண்டு முறை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.
பரிசுத்தொகை :
1. வெற்றி பெரும் அணி – ரூ. 33 கோடி
2. இரண்டாம் இடம் பெரும் அணி – ரூ. 16 கோடி
3. அரை இறுதி போட்டியில் தோல்வி பெரும் இரு அணிக்கும் – ரூ. 6.65 கோடி
4. லீக் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு – ரூ. 33 லட்சம்
4. லீக் போட்டியில் தோல்வி அடையும் 6 அணிக்கும் – ரூ. 83 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கின்றது.
7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !
சச்சின் தொடங்கி வைக்கும் முதல் போட்டி :
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கான சர்வதேச தூதுவராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 50 ஓவர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. இப்போட்டியை கோப்பையுடன் மைதானத்திற்கு வந்து சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைக்க இருக்கின்றார்.
உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா :
இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. எந்த நாடு உலகக்கோப்பை போட்டியை தலைமை ஏற்று நடத்துகின்றதோ அந்த நாட்டின் கிரிக்கெட் அணி தான் கடந்த மூன்று முறைகள் கோப்பையை வென்றுள்ளது. எனவே இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.
அடுத்த 46 நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளது. தொலைக்காட்சி மற்றும் மொபைல்களில் நேரடியாக போட்டியை காண முடியும். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரண்டு கிரிக்கெட் அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள். எனவே போட்டி கடுமையாக இருக்கும் என்பது ரசிகர்கள் கருத்து.