கேரளா விற்பனையாகாத லாட்டரிகேரளா விற்பனையாகாத லாட்டரி

  கேரளா விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ. 1 கோடி பரிசு. அதிர்ஷ்டம் ஒரு முறை தான் வரும். கேரளா மாநிலத்தில் லாட்டரி சீட்டுக் விற்பனை கடை நடத்துபவரிடம் விற்பனை ஆகாத லாட்டரி சீட்டுக்கு ரூ. 1 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளா விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ. 1 கோடி பரிசு ! 

கேரளா விற்பனையாகாத லாட்டரி

 ஒருவர் ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் லாட்டரி சீட்டில் தான் விழ வேண்டும் என்று கூறுவர். இந்த லாட்டரி சீட்டு வாங்கி பணக்காரர்கள் ஆனவர்களுக்கு இருக்கின்றார்கள். லாட்டரி சீட்டு வாங்கி வாங்கி பணம் இழந்து ஏமாந்தவர்களும் உண்டு. இந்த லாட்டரி சீட்டு விற்பனை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் அரசின் அனுமதியுடன் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகின்றது.

JOIN WHATSAPP CHANNEL

கேரளா மாநிலத்தில் லாட்டரி சீட்டு வாங்க மட்டும் அல்லது சீட்டுகளை விற்பனை செய்யும் கடைகளும் ஏராளம். சீட்டு வாங்காவிட்டாலும் கடை நடத்தினால் கூட கோடீஸ்வரர் ஆகலாம் என்பதான சம்பவம் தற்போது கேரளாவில் நிகழ்ந்துள்ளது. 

   கேரளா மாநிலத்தில் கோழிக்கூடு பகுதியை சேர்ந்தவர் N.K.கங்காதரன். இவர் கடந்த 33 ஆண்டுகளாக பேருந்து நடத்துனராக பணி செய்து வந்துள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன் தான் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாட்டரி சீட்டு குலுக்கல் தேதி நெருங்கி விட்டது. ஆனால் பல லாட்டரி சீட்டுகள் விற்பனை ஆகாமல் இருந்துள்ளது. 

  கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதியில் கேரளா அரசின் அனுமதியுடன் 50க்கு  50 என்ற முறையில் குலுக்கல் நடந்து பரிசு பெற்ற லாட்டரி சீட்டு எண்கள் வெளியாகி உள்ளது. மறுநாள் மாலை எதார்த்தமாக விற்பனையாகாத சீட்டுக்களுக்கு பரிசு கிடைத்துள்ளதா என்று பார்த்துள்ளார் கங்காதரன். விற்பனையாத சீட்டுக்கு 1 கோடி பரிசு விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

மதுரையில் நாளை மின்தடை (13.10.2023) இருக்கு ! எந்த பகுதிகள் என்று தெரிந்து கொள்ளுங்கள் !

  வங்கிக்கு சென்று லாட்டரி சீட்டுடை சமர்ப்பித்தால் தான் பரிசு தொகை உறுதியாகும். தனது விற்பனையாகாத சீட்டுக்கு லாட்டரி விழுந்துள்ளது என்பதை யாராவது திருடி விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக கங்காதரன் யாரிடமும் சொல்லவில்லை. மறுநாள் காலை வங்கியில் சமர்ப்பித்த பின் தான் கங்காதரனின் விற்பனையாகாத சீட்டுக்கு பணம் விழுந்துள்ளது என்று அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

  கங்காதரனுக்கு மட்டுமில்லாமல் இவர் கடையில் சீட்டு வாங்கிய 6 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5,000 பரிசு தொகை விழுந்துள்ளது. சாமானிய மனிதனையும் கோடிஸ்வரனாக்கும் நிகழ்வு லாட்டரி சீட்டு மூலம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் லாட்டரியில் பணம் கிடைத்துள்ளது என்று செய்தி அவ்வப்போது வந்தாலும் விற்பனை ஆகாத சீட்டுக்கும் பணம் விழும் என்பது தற்போது நிகழ்ந்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *