தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் ( Social Welfare And Women Empowerment ) செயல்பட்டு வருகின்றது. இங்கு ஒரு நிறுத்த மையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
கோயம்புத்தூர் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே காலியாக இருக்கும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
கோயம்புத்தூர் ஒரு நிறுத்த மையத்தில் ( One Step Center ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. சென்டர் அட்மினிஸ்டர் ( Center Administrator )
2. சீனியர் கன்செல்லர் ( Senior Counselor )
3. வழக்கு தொழிலாளி ( Case Worker )
4. ஐடி நிர்வாகி ( IT Admin )
5. பாதுகாப்பு ( Security )
6. பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper) போன்ற பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிட்டங்களின் எண்ணிக்கை :
கோயம்புத்தூர் ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி :
1. மைய நிர்வாகி :
சமூகப்பணி ( MSW ) , சமூகவியல் , உளவியல் , மருத்துவம் போன்ற துறையில் MA / M.Sc ,முதுகலை பட்டம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. மூத்த ஆலோசகர் :
சமூகப்பணி ( MSW ) , சமூகவியல் , உளவியல் , மருத்துவம் போன்ற துறையில் MA / M.Sc ,முதுகலை பட்டம் முடித்தவர்கள் மூத்த ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
3. வழக்கு தொழிலாளி :
சமூகப்பணி ( MSW ) , சமூகவியல் , உளவியல் , மருத்துவம் போன்ற துறையில் MA / M.Sc ,முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
4. ஐடி நிர்வாகி :
கணினி அறிவியல் துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. பாதுகாப்பு :
அரசின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
6. பல்நோக்கு உதவியாளர் :
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாட்டில் DHS காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயதுத்தகுதி :
21 முதல் 40 வயதிற்குள் இருக்கும் தகுதியுடைய பெண்கள் கோயம்புத்தூர் OSCல் காலியாக இருக்கும் பணியிட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
1. மைய நிர்வாகி – ரூ. 30,000
2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000
3. வழக்கு தொழிலாளி – ரூ. 15,000
4. ஐடி நிர்வாகி – ரூ. 18,000
5. பாதுகாப்பு – ரூ. 10,000
6. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,500 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
30.10.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் கோயம்புத்தூர் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் மட்டுமே விண்ணப்பபடிவத்தினை குறிப்பிடப்பட்ட முகவரிக்கு சரியான நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலர் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,
பழைய கட்டிடம் ,
தரைதளம் ,
கோயம்புத்தூர் – 641018 ,
தமிழ்நாடு .
தொலைபேசி எண் – 0422 – 2305156.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. பிறப்பு சான்றிதழ்
3. கல்வி சான்றிதழ்
4. அனுபவ சான்றிதழ்
5. ஆதார் கார்டு போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
தபால் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்வு முறை :
கோயம்புத்தூர் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.