Jio FinancialJio Financial

 Jio Financial மூலம் இனி வீடு , வாகன கடன் பெறலாம். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ஜியோ ஃபைனான்ஷியல் நிறுவனத்தினை நடத்தி வருகின்றார். இதில் ஜியோ ஃபைனான்ஷியல் சேவை மூலம் வீட்டுக் கடன் மற்றும் வாகனக்கடன் போன்ற பிற கடன் திட்டங்களையும் நிறுவனம் விரைவில் செயல்படுத்த உள்ளது. 

Jio Financial மூலம் இனி வீடு , வாகன கடன் பெறலாம் !

Jio Financial

நிதித்துறையில் முகேஷ் அம்பானி :

  இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் செய்யாத தொழில்களே இல்லை எனலாம். தொலைத்தொடர்பு , சில்லறை வர்த்தகம் போன்ற பல துறைகள் வெற்றிகரமாக செயல்படும் நிலையில் முகேஷ் அம்பானி தற்போது நிதித்துறையிலும் முழுமையாக களம் இறங்க உள்ளார். முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி jio financial நிறுவனத்தின் இயக்குனராக இருக்கின்றார்.  

JOIN WHATSAPP CHANNEL

ஜியோ ஃபைனான்ஷியல் நிறுவனம் :

  ஜியோ ஃபைனான்ஷியல் நிறுவனம் மும்பையில் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சுயத்தொழில் செய்வபர்களுக்கு செய்பவர்களுக்கு தனி நபர் கடன்களையும் வழங்கி வருகின்றது. மேலும் கடைகளை நடத்துபவர்களுக்கு கடன் சேவையை செய்து வருகின்றது. கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் ரூ. 668.2 கோடி லாபம் பெற்றுள்ளது. இவைகள் கடந்த ஆண்டினை விட அதிகம் ஆகும்.

மதுரை மற்றும் திருச்சி நாளை மின்தடை 17.10.2023 ! பவர் பேங்க் எடுங்க சார்ஜ் போடுங்க 

வீடு , வாகன கடன் பெரும் திட்டம் திட்டம் :

  ஜியோ ஃபைனான்ஷியல் நிறுவனம் வீடு , வாகனம் போன்ற கன்ஷியூமர் பைனாஸ் போன்ற பிற கடன் உதவி  திட்டங்களை தொடங்க உள்ளது. மேலும் இந்நிறுவனம் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிகளவில் பைனாஸ் நிறுவனங்கள் இருந்தாலும் பஜாஜ் பைனாஸ் நிறுவனம் தான் முதல் இடத்தில் இருக்கின்றது. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின்  jio financial நிறுவனம் நிதித்துறையில் முழுமையாக ஈடுபட உள்ளது.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *