14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நோக்கியா. அமெரிக்காவில் இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தில் செலவினங்களை குறைக்கும் நோக்கில் 14,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய இருப்பதாக நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நோக்கியா ! 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி அறிவிப்பு !
நோக்கியா :
பின்லாந்து நாட்டை தலைமை இடமாகக் கொண்டு நோக்கியா நிறுவனம் இயங்கி வருகின்றது. 120க்கும் மேல் நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. மொபைல் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் 150க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
14,000 பணியாளர்கள் பணி நீக்கம் :
அமெரிக்கா சந்தைகளில் நோக்கியாவின் 5G உபகரணங்கள் விற்பனை குறைந்துள்ளது. இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு விற்பனை விகிதம் 20% குறைந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 86,000 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். 2026ம் ஆண்டில் இந்நிறுவனம் 800 மில்லியன் யூரோ செலவுகளை குறைக்க இருக்கின்றது. இதனால் செலவினங்களை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் இருக்கும் இந்நிறுவனத்தில் 14,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
நாளை மின்தடை பகுதிகள் ( 21.10.23 ) ! விருதுநகர் வியாபாரிகளே உஷார் !
விற்பனை மந்தம் :
மொபைல் போன்கள் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் முன்னணியில் இருந்தது நோக்கியா நிறுவனம்.மக்களிடம் மொபைல் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மொபைல்கள் தயாரிப்பில் அடுத்தடுத்த நிறுவனங்கள் களம் இறங்கியது. சந்தைகளில் பல நிறுவன பொருட்கள் விற்பனையில் இருந்தாலும் நோக்கியா மொபைல்களுக்கு தனி சிறப்பு உண்டு. ஆனால் தற்போது நோக்கியா நிறுவன பொருட்கள் சந்தையில் விற்பனை குறைந்து விட்டது. இதுவும் பணியாளர்கள் பணி நீக்கம் செய்ய காரணமாக இருக்கலாம்.
நோக்கியா நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. தற்போது அமெரிக்காவில் 14,000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்ய இருக்கின்றனர்.