ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது. பிசிசிஐ அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் போட்டியின் போது பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது.
ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது – பிசிசிஐ அறிவிப்பு !
இந்தியா & வங்கதேசம் :
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதினர். முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 256 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 257 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாண்டியாவிற்கு காயம் :
நேற்றைய போட்டியானது புனேவில் இருக்கும் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பவர் பாண்டியா. இவர் பந்து வீசும் போது பீல்டிங் செய்யும் போது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனே இவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இவர்க்கு முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டது. இவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்து உள்ளனர்.
பிசிசிஐ அறிவிப்பு :
பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நியூசிலாந்து அணியுடன் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார். மேலும் லக்னோவில் 29.10.23 அன்று நடைபெறும் இந்தியா & இங்கிலாந்து போட்டியில் நேரடியாக கலந்து கொள்வர் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது.
Whatsapp New Update 2023 ! இனி ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தலாம் !
இவருக்கு பதில் இவர் :
பாண்டியா வரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. எனவே இவருக்கு பதில்சூரியகுமார் அல்லது முகமது ஷமி களம் இறங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி ரோகித் ஷர்மா தலைமையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாடி வருகின்றது . வருகின்ற நியூசிலாந்து மற்றும் இந்தியா போட்டிகள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் ஆல் ரவுண்டர் பாண்டியா போட்டியில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.