NIRT வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்NIRT வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

  NIRT வேலைவாய்ப்பு 2023 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆய்வாளர் மற்றும் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. NIRTல் காலியாக இருக்கும் இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே இப்பணிகளை விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

NIRT வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் … விண்ணப்பிக்க லிங்க் இதோ !

NIRT வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

அமைப்பின் பெயர் :

  NIRT – National Institute For Research In Tuberculosis ( தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனம் )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

காலிப்பணியிடங்கள் பெயர் :

 1. தொழில்நுட்ப உதவியாளர் நிலை – 2 :

   1. மூத்த புலன் ஆய்வாளர் 

   2. மருத்துவ சமூக சேவகர் 

   3. மூத்த தொழில் நுட்ப உதவியாளர் 

   4. கள ஆய்வாளர் 

   5. ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் 

   6. X – ரே டெக்னீஷியன் 

2. தொழில்நுட்ப உதவியாளர் நிலை – 1 :

  7. சுகாதார உதவியாளர் 

  8. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நிலை – 2

  9. மூத்த உதவியாளர் ( UDC )

10. டிரைவர் & மெக்கானிக் 

11. பல்நோக்கு உதவியாளர் போன்ற பணியிடங்கள் NIRTல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. மூத்த புலன் ஆய்வாளர் – 2

   2. மருத்துவ சமூக சேவகர் – 2

   3. மூத்த தொழில் நுட்ப உதவியாளர் – 2

   4. கள ஆய்வாளர் – 4

   5. ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் – 4

   6. X – ரே டெக்னீஷியன் – 4

   7. சுகாதார உதவியாளர் – 12

  8. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நிலை – 2

  9. மூத்த உதவியாளர் ( UDC ) – 2

10. டிரைவர் & மெக்கானிக் – 2

11. பல்நோக்கு உதவியாளர் – 2 என மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கின்றது.

கல்வித்தகுதி : 

 1. மூத்த புலன் ஆய்வாளர் :

   அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 2. மருத்துவ சமூக சேவகர் :

   சமூகப்பணி , சமூகஅறிவியல் , சமூகவியல் மருத்துவ சமூகவியல் , உளவியல் , மானுடவியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் மற்றும் மூன்று வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

  3. மூத்த தொழில்நுட்ப உதவியாளர் : 

   அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் மூன்று வருட பணி அனுபவம் இருக்க வேண்டும் அல்லது அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

  4. கள ஆய்வாளர் :

   அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் மூன்று வருட பணி அனுபவம் இருக்க வேண்டும் அல்லது அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

  5. ஆய்வக தொழில் நுட்ப உதவியாளர் :

   12ம் வகுப்பில் அறிவியல் துறை படித்து இருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ துறையில் DMLT / MLT முடித்து ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  6. X – டெக்னீஷியன் :

   12ம் வகுப்பில் அறிவியல் துறை படித்திருக்க வேண்டும். டிப்ளமோ துறையில் கதிரியக்கவியல் / ரேடியோகிராபி / படம் தொழில்நுட்பம் முடித்து ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TNPSC வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 1,40,000 சம்பளம் ! 18 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

  7. சுகாதார உதவியாளர் :

   10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். MLT / DMLT முடித்து இரண்டு வருடங்கள் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  8. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் :

   12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

  9. மூத்த உதவியாளர் : 

   12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். அல்லது இளங்கலை பட்டத்துடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

 10. டிரைவர் & மெக்கானிக் :

   10 / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் .RTO அலுவலகத்தின் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். 

 11. பல்நோக்கு உதவியாளர் :

   12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

   1. மூத்த புலன் ஆய்வாளர் – 35

   2. மருத்துவ சமூக சேவகர் – 35

   3. மூத்த தொழில் நுட்ப உதவியாளர் – 35

   4. கள ஆய்வாளர் – 35

   5. ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் – 30 

   6. X – ரே டெக்னீஷியன் – 30

   7. சுகாதார உதவியாளர் – 28

   8. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நிலை – 2 – 28

   9. மூத்த உதவியாளர் ( UDC ) – 28

 10. டிரைவர் & மெக்கானிக் – 25

 11. பல்நோக்கு உதவியாளர் – 25 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

   1. மூத்த புலன் ஆய்வாளர் – ரூ. 28,000

   2. மருத்துவ சமூக சேவகர் – ரூ. 28,000

   3. மூத்த தொழில் நுட்ப உதவியாளர் – ரூ. 28,000

   4. கள ஆய்வாளர் – ரூ. 28,000

   5. ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் – ரூ. 20,000 

   6. X – ரே டெக்னீஷியன் – ரூ. 20,000

   7. சுகாதார உதவியாளர் – ரூ.18,000

   8. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நிலை – 2 – ரூ. 18,000

   9. மூத்த உதவியாளர் ( UDC ) – ரூ. 17,000

 10. டிரைவர் & மெக்கானிக் – ரூ. 16,000

 11. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 15,800

விண்ணப்பிக்க        கிளிக் செய்யவும் 
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLICATION 

 விண்ணப்பிக்க தேவையானவை :

  1. விண்ணப்பபடிவம் 

  2. கல்வி சான்றிதழ் 

  3. பிறப்பு சான்றிதழ் 

  4. சாதி சான்றிதழ் 

  5. ஆதார் கார்டு 

  6. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவைகள் விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் வைத்து இருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கும் முறை :

 NIRT வேலைவாய்ப்பு 2023 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். 02.11.2023ம் தேதியில் காலை 9 மணி 10 மணி வரையில் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

  ICMR – தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனம் ,

  எண் 1 , 

  மேயர் சத்ய மூர்த்தி சாலை ,

  சேத்பேட்டை ,

  சென்னை – 600 031 ,

  தமிழ்நாடு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *